தொடர் விடுமுறையை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்தனர். இதனால் கோவில் வளாகம் மற்றும் முக்கிய வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பொது தரிசன வரிசையில் சென்ற பக்தர்கள் சுமார் 4 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். தொடர் விடுமுறை மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் காரணமாக திருவண்ணாமலை நகரில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். பக்தர்கள் அதிக அளவில் குவிந்ததால் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாகன நெரிசலும் ஏற்பட்டது.

