சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
நேரலை ஸ்கோர்

Settings

முகப்பு/ஆன்மீகம்/புரட்டாசி 3-வது சனிக்கிழமை: ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் அலைமோதிய பக்தர்கள்!
ஆன்மீகம்

புரட்டாசி 3-வது சனிக்கிழமை: ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் அலைமோதிய பக்தர்கள்!

🕒 3 அக்., 2026, 04:47 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
புரட்டாசி 3-வது சனிக்கிழமை: ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் அலைமோதிய பக்தர்கள்!
✨

AI Highlights

  • •புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவ விழாவின் 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தென் திருப்பதி என அழைக்கப்படும் இக்கோயில் 240 படிகள் கொண்ட திருவண்ணாமலை மலையில் அமைந்துள்ளது. இங்கு நின்ற கோலத்தில் ஸ்ரீநிவாச பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகளுக்காக தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்நிலையில், 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீநிவாச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. நடை திறப்பதற்கு முன்பாகவே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை என்பதால் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. இதனால் கோயிலில் கூட்டம் அலைமோதிய நிலையில், பக்தர்கள் 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔