சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
நேரலை ஸ்கோர்

Settings

முகப்பு/அரசியல்/ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம்; 50-க்கும் மேற்பட்டோர் கைது!
அரசியல்

ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம்; 50-க்கும் மேற்பட்டோர் கைது!

🕒 6 அக்., 2026, 04:45 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம்; 50-க்கும் மேற்பட்டோர் கைது!
✨

AI Highlights

  • •அரியலூர் செந்துறையில் செப்டிக் டேங்க் விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சிபிஎம் கட்சியினர் கைது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

அரியலூர் மாவட்டம் செந்துறையில் செப்டிக் டேங்க் பணியின் போது உயிரிழந்த மூன்று தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

செந்துறையில் கடந்த இரண்டாம் தேதி செப்டிக் டேங்க் துப்புரவு பணியின் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு மூன்று தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த இரண்டு நாட்களாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த கட்சியினர் மற்றும் பொதுமக்கள், காவல்துறை தடுப்புகளை மீறி ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த ஆட்சியர் அலுவலகக் கதவுகள் மூடப்பட்டன.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களைக் பலவந்தமாக அப்புறப்படுத்தி கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔