தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் தலைமையில், ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (செப்டம்பர் 21) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை செயல்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள், மேற்கொள்ள வேண்டிய பணிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் ஏற்பாடுகளை ஒருங்கிணைந்து மேற்கொள்வது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

