சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
நேரலை ஸ்கோர்

Settings

முகப்பு/அரசியல்/வளைகாப்பு நிகழ்ச்சியில் மெழுகுவர்த்தி வழங்கியதில் சர்ச்சை: நவல்பட்டு விஜி எம்.எல்.ஏ. ஆவேசம்
அரசியல்

வளைகாப்பு நிகழ்ச்சியில் மெழுகுவர்த்தி வழங்கியதில் சர்ச்சை: நவல்பட்டு விஜி எம்.எல்.ஏ. ஆவேசம்

🕒 5 அக்., 2026, 08:04 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
வளைகாப்பு நிகழ்ச்சியில் மெழுகுவர்த்தி வழங்கியதில் சர்ச்சை: நவல்பட்டு விஜி எம்.எல்.ஏ. ஆவேசம்
✨

AI Highlights

  • •திருச்சியில் நடைபெற்ற வளைகாப்பு விழாவில் மெழுகுவர்த்தி வழங்கிய விவகாரத்தில் தவெக எம்எல்ஏ நவல்பட்டு விஜி மற்றும் எம்பி கிறிஸ்டோபர் திலக் இடையே வாக்குவாதம்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில், குத்துவிளக்கு ஏற்றுவதற்கான மெழுகுவர்த்தி வழங்கிய விவகாரத்தில் திருவெறும்பூர் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. நவல்பட்டு விஜிக்கும், காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக்கிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் ரமேஷ், மாவட்ட ஆட்சியர் பிரதிக் தயாள், எம்.எல்.ஏ.க்கள் கதிரவன், விக்னேஷ், நவல்பட்டு விஜி மற்றும் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குத்துவிளக்கு ஏற்றுவதில் ஏற்பட்ட சர்ச்சை

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் குத்துவிளக்கு ஏற்றப்பட்டது. முதலில் அமைச்சர் ரமேஷ், தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் குத்துவிளக்கை ஏற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.

அப்போது குத்துவிளக்கு ஏற்றுவதற்காக முன்னே வந்த நவல்பட்டு விஜிக்கு மெழுகுவர்த்தி வழங்காமல், காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக்கிடம் மெழுகுவர்த்தி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தியடைந்த நவல்பட்டு விஜி, அங்கிருந்தவர்களிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும், பின்னர் கிறிஸ்டோபர் திலக்கிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கிறிஸ்டோபர் திலக் மெழுகுவர்த்தியை அவரிடம் வழங்கியபோது, அதனை விஜி கீழே தட்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது.இதனால் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அமைச்சர் ரமேஷ் உள்ளிட்டோர் தலையிட்டு நவல்பட்டு விஜியை சமாதானப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் நவல்பட்டு விஜி குத்துவிளக்கை ஏற்றியதாகவும், கிறிஸ்டோபர் திலக் குத்துவிளக்கு ஏற்றாமல் நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔