சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
நேரலை ஸ்கோர்

Settings

முகப்பு/செய்திகள்/சொத்து எழுதித் தர மறுத்ததால் தந்தை முன்பு நாடகமாடிய பூசாரி பலி!
செய்திகள்

சொத்து எழுதித் தர மறுத்ததால் தந்தை முன்பு நாடகமாடிய பூசாரி பலி!

🕒 6 அக்., 2026, 04:43 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
சொத்து எழுதித் தர மறுத்ததால் தந்தை முன்பு நாடகமாடிய பூசாரி பலி!
✨

AI Highlights

  • •நெல்லை மாவட்டம் பாப்பாக்குடியில் தந்தை சொத்து எழுதித் தராததால், அவரை மிரட்ட நாடகமாடிய பூசாரி கயிறு இறுகி பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் விசாரணை.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடியில், தந்தை சொத்து எழுதித் தர மறுத்ததால் அவரை மிரட்டுவதற்காக தூக்கிட்டு நாடகமாடிய பூசாரி விபரீதமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாப்பாக்குடியைச் சேர்ந்தவர் அர்ஜுனன். இவரது ஒரே மகன் கருப்பசாமி (32). அப்பகுதியில் பூசாரியாக பணிபுரிந்து வந்த இவருக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆன நிலையில், குழந்தைகள் இல்லை. மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது மனைவியும் இவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார்.

கருப்பசாமிக்கு அதிக குடிப்பழக்கம் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், தந்தை அர்ஜுனனுக்கு சொந்தமான சொத்துக்களை தனது பெயருக்கு எழுதித் தருமாறு அவர் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், கருப்பசாமி சொத்துக்களை விற்றுவிடுவார் என்ற அச்சத்தில் அர்ஜுனன் அதனை எழுதித் தர மறுத்துள்ளார்.

இதனால் விரக்தியடைந்த கருப்பசாமி, மதுபோதையில் தந்தையை மிரட்டும் நோக்கில் அறையை உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டு தூக்கிட்டுக்கொள்வது போல் நாடகமாடியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கழுத்தில் கயிறு இறுகியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாப்பாக்குடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔