சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
நேரலை ஸ்கோர்

Settings

முகப்பு/செய்திகள்/மல்லாங்கிணறு சாலையில் தீவிர ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரம்!
செய்திகள்

மல்லாங்கிணறு சாலையில் தீவிர ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரம்!

🕒 6 அக்., 2026, 09:59 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
மல்லாங்கிணறு சாலையில் தீவிர ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரம்!
✨

AI Highlights

  • •விருதுநகரிலிருந்து மல்லாங்கிணறு செல்லும் சாலையில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டன.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகரில் இருந்து மல்லாங்கிணறு செல்லும் சாலையில், சாலை விரிவாக்கப் பணிகளுக்காக நெடுஞ்சாலைத் துறை மற்றும் நகராட்சி ஊழியர்கள் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த சாலை விரிவாக்கப் பணிகளுக்காக, அப்பகுதியில் உள்ள கடைகளைக் காலி செய்யுமாறு கடந்த 15 நாட்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத் துறை சார்பில் கடை உரிமையாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் ஒரு சில கடைகள் ஏற்கனவே காலி செய்யப்பட்டன.

இந்நிலையில், காலி செய்யப்படாமல் இருந்த மீதமுள்ள கடைகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். காவல்துறையினரின் பாதுகாப்புடன் நகராட்சி ஊழியர்களின் உதவியோடு சாலையின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. இதற்கிடையே, சில கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அவர்களுக்கு மட்டும் உரிய கால அவகாசம் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔