சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
நேரலை ஸ்கோர்

Settings

முகப்பு/செய்திகள்/கோவையில் ரயல்கேர் மருத்துவமனையில் புதிய நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவு திறப்பு!
செய்திகள்

கோவையில் ரயல்கேர் மருத்துவமனையில் புதிய நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவு திறப்பு!

🕒 5 அக்., 2026, 11:35 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கோவையில் ரயல்கேர் மருத்துவமனையில் புதிய நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவு திறப்பு!
✨

AI Highlights

  • •கோவை ரயல்கேர் மருத்துவமனையில் நரம்பியல் அவசர சிகிச்சைகளுக்கான நிலை-1 தீவிர சிகிச்சைப் பிரிவு அமைச்சர் சம்பத்குமாரால் தொடங்கி வைக்கப்பட்டது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

கோவை ரயல்கேர் மருத்துவமனையில், முழுமையான நிலை-1 நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவு (Neuro Critical Care Unit) திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. நரம்பியல் தொடர்பான அவசர மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு மேம்பட்ட மருத்துவ சேவைகளை வழங்கும் வகையில் இந்தப் புதிய பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடக்க விழாவில் அமைச்சர் சம்பத்குமார் கலந்துகொண்டு புதிய நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவைத் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மருத்துவமனையின் இயக்குநர்கள் டாக்டர் கே. மாதேஸ்வரன், டாக்டர் சிவக்குமார் மற்றும் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

நரம்பியல் அவசரநிலைகளில் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு ஒருங்கிணைந்த மற்றும் விரைவான தீவிர சிகிச்சையை வழங்குவதற்காக இந்த நவீன பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் உலகத்தரம் வாய்ந்த நரம்பியல் மருத்துவ சேவைகளைப் பெற முடியும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔