விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பள்ளி மாணவர்கள் சென்ற ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 5-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்தனர். காயமடைந்த குழந்தைகள் அருப்புக்கோட்டை மற்றும் ரெட்டியாபட்டி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோட்டையூர் மற்றும் மேலூர் கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள், ரெட்டியாபட்டியில் உள்ள அரசுப் பள்ளிக்கு வழக்கம்போல் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மண்டபசாலை அருகே சென்றுகொண்டிருந்த ஆட்டோ மீது, எதிரே வந்த அடையாளம் தெரியாத கார் எதிர்பாராதவிதமாக மோதியது.
விபத்தை ஏற்படுத்திய கார் சம்பவ இடத்திலிருந்து நிறுத்தாமல் சென்றுவிட்டதாகக் கூறப்படும் நிலையில், வாகனம் மற்றும் ஓட்டுநர் குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

