11 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு. அளித்தனர் பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு 108 அவசர உறுதி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தனர் பணி தொடர்ந்து அவர்கள் தெரிவிக்கும் பொழுது, தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் கீழ் அவசரகால மேலாண்மை சார்பாக செயல்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் சேவையில் தமிழகம் முழுவதும் 700க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இதில் 108 அவசர ஊர்தி சேவையை தமிழ்நாடு அரசு நேரடியாக ஏற்று நடத்த வேண்டும், தொழிலாளர் தீர்ப்பாயத் தீர்ப்பை உடனடியாக முழுமையாக அமல்படுத்த வேண்டும், எட்டு மணி நேர வேலையை உடனடியாக அமல்படுத்தி தொழிலாளர்களின் ஊதிய பலன்களை பாதுகாக்க வேண்டும், மாதத்தின் முதல் வேலை நாளிலேயே முழு சம்பளம் மற்றும் ஐந்தாம் தேதிக்குள் வழங்க வேண்டும், தண்டனை கால பணி மாற்ற நடைமுறையை மாற்றி அமைக்க வேண்டும் என் மனம் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருப்பதாகவும், இதற்கு தமிழக அரசு செவி சாய்க்கவில்லை என்றால் வருகிற அக்டோபர் 14ஆம் தேதி மதுரையில் தமிழகத்தில் உள்ள அனைத்து 108 பணியாளர்களும் பட்டினி போராட்டம் நடத்த உள்ளதாகும் அதனைத் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டத்தை நடத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
செய்திகள்
11 அம்ச கோரிக்கை: அக்டோபர் 14-ல் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பட்டினி போராட்டம்!
🕒 6 அக்., 2026, 04:52 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •11 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
