நெய்வேலியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் என்.எல்.சி. இந்தியா குழுமத்தின் புதிய மின்துறை இயக்குனராக சைதன்ய பிரகாஷ் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார்.
மின் துறையில் நீண்ட கால அனுபவம் கொண்ட மூத்த தொழில்நுட்ப வல்லுநரான சைதன்ய பிரகாஷ், இதற்கு முன்பு தாமோதர் வேலி கார்ப்பரேஷன் (டி.வி.சி.) நிறுவனத்தில் பல்வேறு முக்கியப் பதவிகளை வகித்துள்ளார். அங்கு திட்டப்பணிகள், மின் உற்பத்தி, இயக்கம் மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட துறைகளில் இவருக்கு விரிவான அனுபவம் உள்ளது.
கல்வித் தகுதியைப் பொறுத்தவரை, இவர் விசாகப்பட்டினத்தில் உள்ள ஜி.ஐ.டி.ஏ.எம். நிறுவனத்தில் கடந்த 1992 ஆம் ஆண்டு இயந்திரப் பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்றார். அதனைத் தொடர்ந்து, 2007 ஆம் ஆண்டு முதுகலை மேலாண்மை பட்டயப் படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார்.

