Settings

முகப்பு/சர்வதேசம்/திருச்சி - மலேசியா இடையே புதிய நேரடி விமான சேவை, டிசம்பர் 16 முதல் தொடக்கம்!
சர்வதேசம்

திருச்சி - மலேசியா இடையே புதிய நேரடி விமான சேவை, டிசம்பர் 16 முதல் தொடக்கம்!

🕒 21 நவ., 2026, 04:02 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
திருச்சி - மலேசியா இடையே புதிய நேரடி விமான சேவை, டிசம்பர் 16 முதல் தொடக்கம்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து மலேசியாவின் சுபாங் நகருக்கு டிசம்பர் 16 முதல் நேரடி விமான சேவை தொடங்குகிறது. இதன் மூலம் சர்வதேச இணைப்புகள் 9-ஆக உயர்கிறது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து மலேசியாவின் சுபாங் (Subang) நகருக்கு புதிய நேரடி விமான சேவை வரும் டிசம்பர் 16-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த அறிவிப்பை படிக் (Batik) விமான நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

விமான சேவை அட்டவணை:

  • திருச்சியிலிருந்து சுபாங்: திங்கள், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும்.
  • சுபாங்கிலிருந்து திருச்சி: புதன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும்.

விமான நேரங்கள் குறித்த விவரங்களின்படி, திருச்சியிலிருந்து அதிகாலை 12:10 மணிக்கு புறப்படும் விமானம், மலேசிய நேரப்படி காலை 6:30 மணிக்கு சுபாங் விமான நிலையத்தை சென்றடையும். மறுமார்க்கத்தில், மலேசிய நேரப்படி இரவு 10:00 மணிக்கு புறப்படும் விமானம், திருச்சிக்கு இரவு 11:10 மணிக்கு வந்தடையும்.

ஏற்கெனவே திருச்சியிலிருந்து துபாய், அபுதாபி, ஷார்ஜா, மஸ்கட், கோலாலம்பூர், சிங்கப்பூர், கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய 8 சர்வதேச நகரங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது சுபாங் விமான நிலையமும் இணைக்கப்படுவதன் மூலம், திருச்சியிலிருந்து இயக்கப்படும் சர்வதேச விமான நிலையங்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்கிறது. இந்த புதிய சேவை, திருச்சி மற்றும் மலேசியா இடையேயான வர்த்தகம், சுற்றுலா மற்றும் பயணிகள் போக்குவரத்தை மேலும் ஊக்குவிக்கும் என விமான நிலைய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Image credits: GOOGLE

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
19 வயதில் ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா’ பட்டம்... யார் இந்த கஸியா லிஸ் மெஜோ?சர்வதேசம்

19 வயதில் ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா’ பட்டம்... யார் இந்த கஸியா லிஸ் மெஜோ?

Admin🕒 ஆக. 25
வானில் அரிய முழு சூரிய கிரகணம்: வியப்பில் ஆழ்ந்த உலகம்!சர்வதேசம்

வானில் அரிய முழு சூரிய கிரகணம்: வியப்பில் ஆழ்ந்த உலகம்!

Admin🕒 ஆக. 13
டிரம்ப்பின் புதிய வரி உயர்வு: 25 அமெரிக்க மாநிலங்கள் வழக்கு!சர்வதேசம்

டிரம்ப்பின் புதிய வரி உயர்வு: 25 அமெரிக்க மாநிலங்கள் வழக்கு!

Admin🕒 ஆக. 4
தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளை கடத்தி பணம் பறிக்க முயற்சி: கட்டிவைத்து சித்திரவதை – 5 இந்தியர்கள் கைதுசர்வதேசம்

தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளை கடத்தி பணம் பறிக்க முயற்சி: கட்டிவைத்து சித்திரவதை – 5 இந்தியர்கள் கைது

Admin🕒 ஜூலை 29
சுட்டெரித்த வெயிலுக்கு குளிர்ந்த விடை! குளித்தலையில் வெளுத்து வாங்கிய கனமழை!செய்திகள்

சுட்டெரித்த வெயிலுக்கு குளிர்ந்த விடை! குளித்தலையில் வெளுத்து வாங்கிய கனமழை!

Anandakumar🕒 நவ. 25
மழையின்றி காய்ந்த நிலக்கடலை பயிர்கள்: சொந்த செலவில் தண்ணீர் பாய்ச்சி காப்பாற்றும் விவசாயிகள்!செய்திகள்

மழையின்றி காய்ந்த நிலக்கடலை பயிர்கள்: சொந்த செலவில் தண்ணீர் பாய்ச்சி காப்பாற்றும் விவசாயிகள்!

Manimaran🕒 நவ. 25
"நாங்க எங்க போகிறது?" கரூரில் வீடுகள், கடைகளுக்கு சீல்... முதலமைச்சருக்கு பொதுமக்கள் உருக்கமான கோரிக்கை!செய்திகள்

"நாங்க எங்க போகிறது?" கரூரில் வீடுகள், கடைகளுக்கு சீல்... முதலமைச்சருக்கு பொதுமக்கள் உருக்கமான கோரிக்கை!

Anandakumar🕒 நவ. 25
ஆயிரம் ஆண்டு பழமையான கோயிலில் 12,501 விளக்குகளால் பிரம்மாண்ட சிவலிங்கம்! மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி!ஆன்மீகம்

ஆயிரம் ஆண்டு பழமையான கோயிலில் 12,501 விளக்குகளால் பிரம்மாண்ட சிவலிங்கம்! மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி!

Ramachandran🕒 நவ. 25
TNO வாட்ஸ்அப் சானல் ➔