திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அமைந்துள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (Government ITI) மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா விமரிசையாக நடைபெற்றது.
விழாவிற்கு திருச்சி மண்டலப் பயிற்சி இணைய இயக்குநர் திருமதி பி.பரமேஸ்வரி தலைமை தாங்கினார். அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் பொறுப்பு முதல்வர் திருமதி மு.முத்தழகி முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.கே.பிரபாகரன் மற்றும் குர்யா நினைவு அறக்கட்டளை மற்றும் குர்யா சமுதாயக் கல்லூரியின் நிறுவனத் தலைவர் டாக்டர் சூர்யா வெ.சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் மாணவர்களின் தொழில்திறன் மேம்பாடு, வேலைவாய்ப்புக்கான பயிற்சியின் முக்கியத்துவம் மற்றும் தொழிற்கல்வி மூலம் இளைஞர்கள் சுயசார்பு அடைவதற்கான வாய்ப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.
நிகழ்ச்சியின் இறுதியாக பயிற்சி அலுவலர் திரு.எம்.ஆண்டவர் நன்றியுரை ஆற்றினார். இவ்விழாவில் தொழிற்பயிற்சி நிலையத்தின் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.









