Settings

முகப்பு/International News/துருக்கியில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்
International News

துருக்கியில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்

🕒 25 செப்., 2026, 05:07 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
துருக்கியில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்
✨

AI Highlights

  • •துருக்கியின் கிழக்கு பகுதியில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட அதிர்வால் கட்டிடங்கள் குலுங்கிய நிலையில், உயிரிழப்பு அல்லது கட்டிட இடிபாடுகள் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

துருக்கியின் கிழக்கு பகுதியில் நேற்று ரிக்டர் அளவுகோலில் 5.1 புள்ளிகள் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கிய நிலையில், பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

துருக்கியின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் அதிர்வால் கட்டிடங்கள் குலுங்கியதைத் தொடர்ந்து, பீதியடைந்த பொதுமக்கள் பலர் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

எனினும், இந்த நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகள் அல்லது உயிரிழப்புகள் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

துருக்கி புவித்தட்டு இயக்கம் அதிகம் காணப்படும் பகுதிகளில் அமைந்துள்ளதால், அங்கு அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔