சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/வாலிபர் கொலை வழக்கில் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!
செய்திகள்

வாலிபர் கொலை வழக்கில் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

🕒 21 செப்., 2026, 10:33 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
வாலிபர் கொலை வழக்கில் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

AI Highlights

  • அரியலூரில் ராஜா வெட்டிக் கொலை: குற்றவாளிகளை கைது செய்யக் கோரி உறவினர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

அரியலூர் மாவட்டம் புதுப்பாளையம் கிராமத்தில் வீட்டுப்பாதை தொடர்பான பிரச்சினையில் ராஜா என்பவர் நேற்று இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சுப்பிரமணியன் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கொலைக்கு காரணமான அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உயிரிழந்த ராஜாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இன்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்தின் இரு நுழைவு வாயில்களிலும் திரண்டதால், இரண்டு வாயில்களும் மூடப்பட்டன. இதனால் மனு அளிக்க ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் உள்ளே செல்லவும், வெளியே வரவும் சிரமம் ஏற்பட்டது. சிலர் சுவர் ஏறி குதித்து வெளியேறினர்.

அதிகாரிகள் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வராததால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி அனுப்பப்பட்டன.

இதையடுத்து போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தால் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔