சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/ஏபிசி மையத்தில் முறைகேடு? தெருநாய் கொலைகளை தடுக்க கோரி விலங்குகள் நல ஆர்வலர்கள் மனு
செய்திகள்

ஏபிசி மையத்தில் முறைகேடு? தெருநாய் கொலைகளை தடுக்க கோரி விலங்குகள் நல ஆர்வலர்கள் மனு

🕒 21 செப்., 2026, 09:25 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
ஏபிசி மையத்தில் முறைகேடு? தெருநாய் கொலைகளை தடுக்க கோரி விலங்குகள் நல ஆர்வலர்கள் மனு

AI Highlights

  • நெல்லை மாநகரில் தெருநாய்கள் கொடூரமாக கொல்லப்படுவதை தடுக்கவும், மேலப்பாளையம் ஏபிசி மைய செயல்பாடுகள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தவும் விலங்குகள் நல ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருநெல்வேலி மாநகரில் தெருநாய்கள் கொடூரமாக கொல்லப்படுவதை தடுக்கவும், மேலப்பாளையத்தில் செயல்பட்டு வரும் விலங்குகள் கருத்தடை மையத்தின் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்தவும் வலியுறுத்தி விலங்குகள் நல ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நெல்லை மாவட்ட விலங்கு நல அலுவலர்கள் அமைப்பு சார்பில், நெல்லை மாவட்ட பொதுஜன பொதுநல சங்கத் தலைவர் முகமது அய்யூப் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது மேலப்பாளையம் பகுதியில் உயிரிழந்ததாக கூறப்படும் தெருநாய்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

மனுவில், நெல்லை மாநகரில் சமீபகாலமாக தெருநாய்கள் அடித்துக் கொல்லப்படுவது, விஷம் வைத்து கொல்லப்படுவது மற்றும் கற்களால் தாக்கி துன்புறுத்தப்படுவது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், உச்சநீதிமன்ற உத்தரவுகளின்படி தெருநாய்களுக்கு உணவு வழங்கும் உணவளிப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை சிலர் மிரட்டுவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. தெருநாய்களுக்கு உணவு வழங்குபவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

ஏபிசி மையத்தில் விசாரணை நடத்த கோரிக்கை

மேலப்பாளையம் நாய் கருத்தடை மையத்தில் நடைபெறுவதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் அலட்சியம் தொடர்பாக ஏற்கனவே மனு அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

முறையற்ற முறையில் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளால் நாய்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். காயங்களுடன் பரிதாபமான நிலையில் இருக்கும் தெருநாய்களையும் கருத்தடை செய்வதற்காக கொண்டு வந்து, அதுதொடர்பான படிவங்களில் விலங்குகள் நல ஆர்வலர்களிடம் கையெழுத்து பெற மாநகராட்சி தரப்பில் வற்புறுத்தப்படுவதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து, மேலப்பாளையம் ஏபிசி மையத்தின் செயல்பாடுகள் குறித்து உடனடியாக சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும், உயிரிழந்த நாய்கள் பிரேத பரிசோதனை செய்யப்படாமல் புதைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

விசாரணை நிறைவடையும் வரை அனைத்து கருத்தடை அறுவை சிகிச்சைகளையும் தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்றும், தெருநாய்களை கொடூரமாக கொல்லும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

மேலும், தெருநாய்களுக்கு உணவு வழங்குபவர்களை துன்புறுத்தக்கூடாது என காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔