சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/கடையை சூறையாடிய காளை: தடுக்க வந்த ஊழியரை முட்டித் தூக்கி வீசிய சம்பவம் – சிசிடிவி காட்சிகள் வைரல்
செய்திகள்

கடையை சூறையாடிய காளை: தடுக்க வந்த ஊழியரை முட்டித் தூக்கி வீசிய சம்பவம் – சிசிடிவி காட்சிகள் வைரல்

🕒 21 செப்., 2026, 05:59 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
கடையை சூறையாடிய காளை: தடுக்க வந்த ஊழியரை முட்டித் தூக்கி வீசிய சம்பவம் – சிசிடிவி காட்சிகள் வைரல்

AI Highlights

  • தேனி மாவட்டம் போடியில் கடையை சூறையாடிய காளை மாடு, தடுக்க வந்த ஊழியரை முட்டித் தூக்கி வீசியது. சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தேனி மாவட்டம் போடி ஐ.கே.என். மேல்நிலைப்பள்ளி அருகே செயல்பட்டு வரும் ஸ்டேஷனரி கடைகளில் நேற்று இரவு காளை மாடு ஒன்று புகுந்து அங்கிருந்த பொருட்களை முட்டி சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்பகுதியில் சுற்றித்திரிந்த காளை மாடு, கடைகளின் முன்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை முட்டி தள்ளி சேதப்படுத்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தடுக்க முயன்ற கடை ஊழியர் கருப்பையா என்பவரை காளை ஆக்ரோஷமாக முட்டித் தூக்கி வீசியதாக தெரிகிறது. இதில் லேசான காயமடைந்த கருப்பையா, அச்சமடைந்து அங்கிருந்து ஓடி தப்பியதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அந்த காளை மாடு அப்பகுதியில் தொடர்ந்து சுற்றித்திரிந்து, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

பொது இடங்களில் கால்நடைகளை கட்டுப்பாடின்றி சுற்றித்திரிய விடக்கூடாது என விதிமுறைகள் உள்ள நிலையில், போடி பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக இறைச்சிக்காக கால்நடைகளை வளர்த்து வருவதாகவும், அவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்தாமல் சாலைகளில் சுற்றித்திரிய விடுவதால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

போடி பகுதியில் கால்நடைகள் தொடர்பான சம்பவங்களில் பொதுமக்கள் காயமடைந்ததுடன், இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவமும் ஏற்கனவே நடந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், பள்ளி அருகே மீண்டும் காளை தாக்குதல் சம்பவம் நடைபெற்றிருப்பது பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பள்ளியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வரும் நிலையில், பள்ளி அருகே கால்நடைகள் சுற்றித்திரிவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

காளை மாடு கடைக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியதும், ஊழியரை முட்டித் தூக்கி வீசியதுமான சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

போடி நகராட்சி சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔