சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/ஆன்மீகம்/அரியலூர் கோதண்டராமசாமி கோவில் தேரோட்டம் வெகு விமரிசை!
ஆன்மீகம்

அரியலூர் கோதண்டராமசாமி கோவில் தேரோட்டம் வெகு விமரிசை!

🕒 22 செப்., 2026, 05:46 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
அரியலூர் கோதண்டராமசாமி கோவில் தேரோட்டம் வெகு விமரிசை!

AI Highlights

  • அரியலூர் ஸ்ரீ கோதண்டராமசாமி கோவில் பிரம்மோற்சவ விழாவின் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

அரியலூர் நகரில் பழமை வாய்ந்த ஸ்ரீ கோதண்டராமசாமி திருக்கோவிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று “கோவிந்தா... கோவிந்தா...” என பக்தி முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

அரியலூர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கோதண்டராமசாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 14-ம் தேதி கருட கம்பத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி தினமும் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து சிம்ம வாகனம், அனுமன் வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதன் ஒரு பகுதியாக திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இன்று பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது.

இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளிய பெருமாளை பக்தர்கள் வழிபட்டனர். அலங்கரிக்கப்பட்ட தேரில் பெருமாள் எழுந்தருளிய காட்சி பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.

தேரோட்டத்தை அரியலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் தாமரை ராஜேந்திரன் ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.

இதையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் “கோவிந்தா... கோவிந்தா...” என பக்தி முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔