சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/ஆன்மீகம்/காந்திமதி யானை மறைவால் கஜபூஜை நிறுத்தம் – நெல்லையப்பர் கோயிலுக்கு புதிய யானை வழங்க கோரிக்கை
ஆன்மீகம்

காந்திமதி யானை மறைவால் கஜபூஜை நிறுத்தம் – நெல்லையப்பர் கோயிலுக்கு புதிய யானை வழங்க கோரிக்கை

🕒 15 செப்., 2026, 02:45 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
காந்திமதி யானை மறைவால் கஜபூஜை நிறுத்தம் – நெல்லையப்பர் கோயிலுக்கு புதிய யானை வழங்க கோரிக்கை

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருநெல்வேலி மாநகரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயிலுக்கு புதிய யானை வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி, அதிமுக திருநெல்வேலி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் தச்சை N. கணேசராஜா தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.


நெல்லையப்பர் கோயிலில் தொன்றுதொட்டு நடைபெற்று வரும் பாரம்பரிய நடைமுறைகளில் கஜபூஜையும் ஒன்று என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தினமும் காலையில் கஜபூஜை நடைபெற்ற பின்னரே சுவாமிக்கு இதர நித்திய கால பூஜைகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், தாமிரபரணி நதியிலிருந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்வதற்கான தீர்த்த நீரை யானையின் மேல் வைத்து கும்பத்தில் கொண்டு வருவது பாரம்பரியமாக இருந்து வந்ததாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்நிலையில், கோயில் பராமரிப்பில் இருந்த 55 வயதான பெண் யானை காந்திமதி, வயது முதிர்வு காரணமாக கடந்த 12.01.2025 அன்று உயிரிழந்தது. அதன் பின்னர், கோயிலில் தொன்றுதொட்டு நடைபெற்று வந்த கஜபூஜை நடைபெறாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, கோயிலின் பாரம்பரிய நடைமுறைகள் மற்றும் ஆகம விதிகளின்படி பூஜைகள் தொடர்ந்து நடைபெறும் வகையில், நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயிலுக்கு புதிய யானை ஒன்றை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔