பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி சார்பில் ஏழை எளிய பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வி.எம்.சத்திரத்தில் உள்ள ருத்ரா தொண்டு நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏழை எளிய பெண்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு கலந்து கொண்டு பெண்களுக்கு புதிய ஆடைகளை வழங்கினார். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முன்னாள் பொதுச் செயலாளர் எம்.யோபு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மூத்த வழக்கறிஞர் சி.மரியக்குழந்தை, நெல்லை மாவட்ட INTUC தலைவர் வழக்கறிஞர் டி.ராம்குமார், தமிழ்நாடு ஜவஹர் பால் மஞ்ச் ஒருங்கிணைப்பாளர் எஸ்.வடிவேல் குமரன், நெல்லை மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச் செயலாளர் ஆர்.ராஜா மெர்சி, பொதுச் செயலாளர் ஆர்.தயாநிதி உள்ளிட்டோர் வரவேற்புரை வழங்கினர்.
மேலும், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர்கள் பாளை எம்.அருள் ராஜ், மானூர் வட்டார முன்னாள் பொறுப்பாளர் பி.அருள் ராஜ், நெல்லை மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் துணைத் தலைவர் ஜே.ஜான், காங்கிரஸ் நிர்வாகிகள் கார்த்தி, மேலக்கரை செந்தில், விஸ்வநாதன், மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ருத்ரா தொண்டு நிறுவனத்தின் நிறுவனர்-இயக்குனர் இராமச்சந்திரன், இயக்குனர் சுசிலா மற்றும் தொண்டு நிறுவன பணியாளர்கள் செய்திருந்தனர்.

