விருதுநகர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் செல்வம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசைப் பொருட்களை வழங்கிச் சிறப்பித்தார். விருதுநகர் மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,000 கர்ப்பிணி பெண்களுக்குச் சமுதாய வளைகாப்பு நடத்தத் திட்டமிடப்பட்ட நிலையில், விருதுநகர் ஒன்றியத்திற்குட்பட்ட 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு விருதுநகரில் வைத்து இந்த விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற தாய்மார்களுக்கு 5 வகை கலவை சாதம், மற்றும் பாரம்பரிய சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் சிறப்புரை ஆற்றிய சட்டமன்ற உறுப்பினர் செல்வம் நீங்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த இந்த அரசு, ஒரு குடும்பமாக உங்கள் நலனில் என்றும் அக்கறை செலுத்தும். முதலமைச்சர் ஒவ்வொரு தாய்மார்களுக்கும் தாய்மாமனாக இருந்து அவர்களின் குழந்தைகளுக்கான அனைத்து நலத்திட்டங்களையும் சாத்தியமாக்கி வருகிறார். அங்கன்வாடிகள் முதல் அரசுப் பள்ளிகள் வரை தனியார் பள்ளிகளுக்கு நிகரான உலகத் தரத்திலான கட்டமைப்பு, இலவசச் சீருடைகள், சைக்கிள்கள் மற்றும் காலை உணவுத் திட்டம் உள்ளிட்டவை சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவ, மாணவிகள் உயர்கல்வி கற்று அரசு அதிகாரிகளாகவும், வழக்கறிஞர்களாகவும் உருவெடுக்க மாதந்தோறும் கல்வி உதவித்தொகைகளும் வழங்கப்படுகின்றன.வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு வீடுகள், இலவச மின்சாரம், சிலிண்டர் திட்டங்கள், மகளிர் வாழ்வாதாரத்திற்கான ஆடுகள் வழங்கும் திட்டங்கள் மற்றும் ரூ.25 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படுகின்றன.விருதுநகர் பகுதி தாய்மார்கள் மகப்பேறு மருத்துவ உதவிக்காக தொலைதூரம் அலையாத வண்ணம், அருகிலேயே உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் அனைத்து நவீன வசதிகளும் விரைவாகச் செய்து தரப்படும். சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களைத் தொடர்புகொள்ள இயலாத சூழலில், நகரின் மையப்பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை எந்நேரமும் அணுகித் தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்ளலாம். எனத் தெரிவித்தார்
அரசியல்
சமூக நலத்துறை சார்பில் சமுதாய வளைகாப்பு விழா
🕒 23 செப்., 2026, 11:12 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •விருதுநகரில் சமூக நலத்துறை சார்பில் சமுதாய வளைகாப்பு விழா சட்டமன்ற உறுப்பினர் செல்வம் பேச்சு.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
