சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/அரசியல்/ஸ்ரீ மகா மாரியம்மன் உள்ளிட்ட கோவில்களில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்!
அரசியல்

ஸ்ரீ மகா மாரியம்மன் உள்ளிட்ட கோவில்களில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்!

🕒 17 செப்., 2026, 09:50 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ஸ்ரீ மகா மாரியம்மன் உள்ளிட்ட கோவில்களில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்!

AI Highlights

  • அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே மருதூர் ஸ்ரீ மகா மாரியம்மன், சக்தி விநாயகர் உள்ளிட்ட கோவில்களில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 10,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

10,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மருதூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன், சக்தி விநாயகர் உள்ளிட்ட ஆலயங்களில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கங்கை, காவிரி, கும்பகோணம் மகாமக குளம், ராமேஸ்வரம் கோடி தீர்த்தம், கொள்ளிடம் உள்ளிட்ட பல்வேறு புனித நீர்கள் சேகரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வேத சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கல இசையுடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

விழாவின் தொடக்கமாக கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து பூஜை, கோ பூஜை, அனுக்ஞை, கலா கர்ஷணம் உள்ளிட்ட பல்வேறு வைதிக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜை, மகாபூர்ணாஹுதி மற்றும் யாத்ரா தானம் நடைபெற்றது. இதையடுத்து இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன.

கும்பாபிஷேகத்தின் முக்கிய நிகழ்வாக வேள்விச்சாலையில் இருந்து புனித தீர்த்தக் குடங்கள் ஊர்வலமாக புறப்பட்டன. பட்டாசுகள் வெடிக்க, நாதஸ்வரம் மற்றும் மேளதாளங்கள் முழங்க, மங்கள வாத்தியங்களுடன் புனித தீர்த்தக் குடங்கள் கோவிலை வலம் வந்தன.

பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கோவில் விமான கலசங்களில் புனித தீர்த்தம் ஊற்றப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது வானில் கருட பகவான் வட்டமிட்டதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

கும்பாபிஷேகத்தை தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். பின்னர் புனித தீர்த்தம் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

இந்த கும்பாபிஷேக விழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 10,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔