சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/அரசியல்/பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கம்; மாணவியருடன் அமர்ந்து உணவருந்திய அமைச்சர் கீர்த்தனா
அரசியல்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கம்; மாணவியருடன் அமர்ந்து உணவருந்திய அமைச்சர் கீர்த்தனா

🕒 22 செப்., 2026, 05:18 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கம்; மாணவியருடன் அமர்ந்து உணவருந்திய அமைச்சர் கீர்த்தனா

AI Highlights

  • சிவகாசி அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்து, மாணவியருடன் அமர்ந்து உணவு அருந்தினார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்தின் விரிவாக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா கலந்து கொண்டு மாணவியருக்கு உணவு பரிமாறியதுடன், அவர்களுடன் அமர்ந்து காலை உணவு அருந்தினார்.

சிவகாசியில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அறி முன்னிலையில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, விரிவாக்கம் செய்யப்பட்ட காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதையடுத்து அமைச்சர் கீர்த்தனா மற்றும் மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அறி ஆகியோர் மாணவியருக்கு காலை உணவு பரிமாறினர். பின்னர் மாணவியருடன் அமர்ந்து உணவு அருந்தினர்.

அப்போது மாணவி ஒருவருக்கு அமைச்சர் கீர்த்தனா காலை உணவை ஊட்டி விட்டு, உணவின் தரம் மற்றும் சுவை குறித்து அவரிடம் கேட்டறிந்தார்.

முன்னதாக பள்ளிக்கு வந்த அமைச்சர் கீர்த்தனாவுக்கு மாணவ-மாணவியர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பள்ளி மாணவியர் தயாரித்திருந்த காலை உணவு திட்டம் தொடர்பான ஓவியங்கள் மற்றும் கைவினைப் பொருட்களின் கண்காட்சி நடைபெற்றது.

கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அறி மற்றும் அமைச்சர் கீர்த்தனா ஆகியோர் பார்வையிட்டு, மாணவியரின் படைப்புத் திறனை பாராட்டினர். மேலும், அமைச்சர் கீர்த்தனா மற்றும் முதலமைச்சர் விஜயின் தத்ரூப ஓவியங்களும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. அவற்றை பார்வையிட்ட அமைச்சர் கீர்த்தனா, மாணவியரின் திறமையை பாராட்டினார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔