சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact CheckCitizen ReporterReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/அரசியல்/எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதைக்கண்டித்து விருதுநகரில் திமுக ஆர்ப்பாட்டம்: கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கைது!
அரசியல்

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதைக்கண்டித்து விருதுநகரில் திமுக ஆர்ப்பாட்டம்: கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கைது!

The News Outlook
🕒 4 ஆக., 2026, 09:56 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதைக்கண்டித்து விருதுநகரில் திமுக ஆர்ப்பாட்டம்: கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கைது!

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தஞ்சாவூரில் நடைபெற்ற விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, விருதுநகரில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உட்பட 200க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர். தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின் போது பேசப்பட்ட கருத்துகள் தொடர்பாக, தஞ்சாவூர் காவல் துறையினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இக்கைது நடவடிக்கையைக் கண்டித்தும், தமிழக வெற்றிக் கழக அரசு மற்றும் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களைக் கண்டித்தும் தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் வீதிப்போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பாக விருதுநகர் மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சர்களான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமை தாங்கி, தமிழக அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர். காவல் துறையின் அனுமதியின்றி இப்போராட்டம் நடத்தப்பட்டதால், முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட திமுக தொண்டர்களைக் காவல்துறையினர் கைது செய்து, அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இச்சம்பவத்தால் விருதுநகர் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியதாவது, விவசாயிகளின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை இந்த அரசு அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு கைது செய்துள்ளது. இதனை எதிர்த்துத் தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் வீரியத்துடன் போராடி வருகின்றனர். திமுக ஆட்சிக் காலத்தில் உரிய நேரத்தில் காவிரி நீர் தமிழகத்திற்கு வந்து சேர்ந்தது. இந்த நிதர்சனமான உண்மையைத் தமிழக மக்களிடமிருந்து திசைதிருப்பி மறைப்பதற்காகவே, உதயநிதி ஸ்டாயினைக் கைது செய்து தமிழக வெற்றிக் கழக அரசு நாடகமாடி வருகிறது. இந்த அராஜகப் போக்கை தமிழக மக்களும், திமுகவினரும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; வன்மையாகக் கண்டிக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...