திருநெல்வேலி டவுன் உழவர் சந்தை பகுதியில் செயல்பட்டு வரும் கண்டியப்பேரி அரசு புறநகர் மருத்துவமனையில், திருநெல்வேலி தமிழக வெற்றி கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ். முருகன் இன்று ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையின் செயல்பாடுகள், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்த அவர், மருத்துவமனைக்கு தேவையான வசதிகள் மற்றும் கோரிக்கைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ். முருகன், மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், தேவையான கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.எட்டு துறைகள் இங்கு செயல்பட்டு வரும் நிலையில் மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும், அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.அப்போது எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து “உண்மை, உண்மை” என கூறி வருகிறாரே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஆர்.எஸ். முருகன், “நேரில் கேட்டால் எந்த உண்மை கிடைக்கும்? நேர்மையான முறையில்தான் பணியிட மாறுதல்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆட்சியில் எத்தனை சதவீதம் கமிசன் பெறப்பட்டது என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். முந்தைய ஆட்சியில் என்ன நடந்தது என்பதும் அனைவருக்கும் தெரியும்” என்றார். மேலும், “நல்ல முறையில் ஆட்சி வழங்க வேண்டும் என்பதுதான் முதலமைச்சரின் எண்ணம். முந்தைய ஆட்சியையோ, அதற்கு முந்தைய ஆட்சியையோ குறை சொல்லவில்லை. சொல்லப்படும் சட்டமன்றத்தில் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரம் கேட்டார்கள். அதற்குத்தான் நேற்று சட்டப்பேரவையில் பதில் அளித்தேன்” தொடர்ந்து, கடந்த ஆட்சியில் ஒப்பந்தங்களில் பெறப்பட்டதாக கூறப்படும் சதவீதம் குறித்த ஆதாரம் எதிர்க்கட்சிகள் கேட்பது தொடர்பாக பேசிய அவர், “அதற்கான ஆதாரம் முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சருக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் தெரியும். எனக்கும் தெரியும்” என்றார். நெடுஞ்சாலைத் துறையில் ஒப்பந்தம் பெற “எனக்கு எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை. ஆதாரம் கேட்கிறார்கள். அந்த ஆதாரம் அவருக்கும் தெரியும், எனக்கும் தெரியும். நிர்வாகத்தில் டெண்டரில் என்னென்ன நடைமுறைகள் நடந்தது என்பது மக்களுக்கும் தெரியும், அவர்களுக்கும் தெரியும், என்னைப் போன்ற ஒப்பந்ததாரர்களுக்கும் தெரியும்” என பதிலளித்தார். மேலும், “முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சருக்கும் எனக்கும் என்ன நடந்தது என்பது தெரியும்” என கூறிவிட்டு, கடந்த ஆட்சியில் ஒப்பந்தங்களுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காமல் சென்றார். ஆர்.எஸ். முருகனிடம் எழுப்பப்பட்ட முக்கிய கேள்விக்கு அவர் நேரடியாக பதில் அளிக்காமல், முந்தைய ஆட்சியில் நடைபெற்றதாக கூறப்படும் நடைமுறைகள் குறித்து நேரடியாக பதிலாக இல்லாமல் குழப்பமான பதிலாக அமைந்தது
அரசியல்
நெடுஞ்சாலைத் துறையில் ஒப்பந்தம் பெற நெருக்கடியா? – ஆர்.எஸ். முருகன் பரபரப்பு பேட்டி
The News Outlook
🕒 8 ஆக., 2026, 08:39 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு

