தஞ்சையில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் குறித்து இழிவாகப் பேசியதாகக் கூறி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து விருதுநகரில் தமிழக வெற்றிக் கழகத்தினர் (தவெக) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் தேசபந்து மைதானம் எதிரே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, தவெக கிழக்கு மாவட்டச் செயலாளர் செல்வம் மற்றும் மாவட்டத் துணைச் செயலாளர் நாகஜோதி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் அக்கட்சியின் மகளிரணியினர் உட்பட திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, ஜோசப் விஜய் குறித்துப் பேசிய பேச்சுக்காக உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கோருவதுடன், தனது பேச்சை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, அவருக்கு எதிராகக் கண்டனக் கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

