சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்றக் கோரி ஆர்ப்பாட்டம்
செய்திகள்

ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

🕒 24 செப்., 2026, 04:23 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்றக் கோரி ஆர்ப்பாட்டம்
✨

AI Highlights

  • •தலைமை ஆசிரியர் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து விருதுநகரில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்றவும் கோரிக்கை விடுத்தனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு, தலைமை ஆசிரியர் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும், ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ‘ஆசிரியர் பணிப் பாதுகாப்புச் சட்டம்’ இயற்றக் கோரியும் தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் வாஞ்சிநாதன் மற்றும் மாநில அமைப்புச் செயலாளர் முத்தையா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பூர் நஞ்சப்பா அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஆசிரியர் சங்கத்தின் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பள்ளிகளில் ஆசிரியர்கள் அச்சமின்றி பணியாற்றுவதற்கான பாதுகாப்பான சூழலை உருவாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மீது இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில், அவர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்யும் தனி சட்டத்தை தமிழக அரசு உடனடியாக இயற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

வகுப்பறைகளிலும், பள்ளி வளாகங்களிலும் ஆசிரியர்கள் எவ்வித அச்சமும் இன்றி பணியாற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் பாலகிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளர் அன்பழகன், மாநில பொருளாளர் அன்பழகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔