சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் – 45 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு
செய்திகள்

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் – 45 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு

🕒 25 செப்., 2026, 12:23 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் – 45 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு
✨

AI Highlights

  • •வெம்பக்கோட்டை ஒன்றியம் செவல்பட்டியில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறி பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் செவல்பட்டியில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறி, பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செவல்பட்டி பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால், பொதுமக்கள் தனியார் வாகனங்கள் மூலம் குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தொடர்ந்து குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படாததால் அதிருப்தியடைந்த பெண்கள், செவல்பட்டி பஸ் நிறுத்தம் அருகே காலி குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் சிவகாசியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையில் சுமார் 45 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


அதிகாரிகள் பேச்சுவார்த்தை

சாலை மறியல் குறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கமல் தலைமையிலான போலீசாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். செவல்பட்டி பகுதியில் தடையின்றி குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இதையடுத்து பெண்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

செவல்பட்டி பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔