சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் 1,330 திருக்குறளையும் பழமையான தமிழி எழுத்து வடிவில் எழுதி சாதனை படைத்தனர்.
செய்திகள்

அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் 1,330 திருக்குறளையும் பழமையான தமிழி எழுத்து வடிவில் எழுதி சாதனை படைத்தனர்.

🕒 26 செப்., 2026, 05:16 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் 1,330 திருக்குறளையும் பழமையான தமிழி எழுத்து வடிவில் எழுதி சாதனை படைத்தனர்.
✨

AI Highlights

  • •விருதுநகர் இனாம் ரெட்டியாபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் 1,330 திருக்குறளையும் பழமையான தமிழி எழுத்து வடிவில் எழுதி சாதனை படைத்தனர். ஆட்சியர் சரண்யா ஹரி பாராட்டு.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் இனாம் ரெட்டியாபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள், திருக்குறளின் 1,330 குறள்களையும் பழமையான தமிழி (தமிழ்ப் பிராமி) எழுத்து வடிவத்தில் எழுதி சாதனை படைத்துள்ளனர்.

பண்டைய தமிழ் எழுத்து முறையான தமிழி எழுத்து வடிவத்தை மாணவர்கள் எளிதாகக் கற்றுக்கொள்ளும் வகையில், விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் “திசை – தமிழை அறிவோம்” என்ற சிறப்புப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

இந்தப் பயிற்சி முகாமில் ஆர்வத்துடன் பங்கேற்ற இனாம் ரெட்டியாபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள், தமிழி எழுத்து வடிவத்தை கற்றுக்கொண்டனர். தொடர்ந்து தங்களது முயற்சியின் மூலம் திருக்குறளின் 1,330 குறள்களையும் தமிழி வரிவடிவில் எழுதி அசத்தியுள்ளனர்.

அரசுப் பள்ளி மாணவிகளின் தமிழ் ஆர்வம் மற்றும் தொன்மையான தமிழ் எழுத்து குறித்த அவர்களின் முயற்சியை அறிந்த விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் சரண்யா ஹரி, மாணவிகளை நேரில் அழைத்து பாராட்டினார்.

மாணவிகள் உருவாக்கிய தமிழி எழுத்தில் எழுதப்பட்ட திருக்குறள் ஏடுகளை பார்வையிட்ட ஆட்சியர், அவர்களின் முயற்சியை வெகுவாகப் பாராட்டி, வாழ்த்துச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

தமிழின் தொன்மையான எழுத்து வடிவத்தை ஆர்வத்துடன் கற்றுக்கொண்டு, திருக்குறளின் 1,330 குறள்களையும் தமிழி வடிவில் எழுதியுள்ள அரசுப் பள்ளி மாணவிகளின் இந்த முயற்சி, தமிழ் மொழி மற்றும் வரலாறு மீதான அவர்களின் ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது. மேலும், மாவட்டத்தின் பிற பள்ளி மாணவர்களுக்கும் இது ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔