திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் நடிகர் தனுஷ் தனது மகன்களுடன் சாமி தரிசனம் செய்தார்.
நடிகர் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா ஆகியோருடன் பழனிக்கு வந்தார். தொடர்ந்து ரோப் கார் மூலம் மலைக்கோயிலுக்குச் சென்ற அவர், அங்கு நடைபெற்ற கால பூஜையில் கலந்து கொண்டு பழனி முருகப்பெருமானை வழிபட்டார்.
தரிசனத்தைத் தொடர்ந்து, கோயில் தேவஸ்தானம் சார்பில் நடிகர் தனுஷுக்கு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் சிறிது நேரம் கோயில் வளாகத்தில் இருந்த அவர், ரோப் கார் மூலம் மீண்டும் மலை அடிவாரத்திற்கு வந்தார்.
இதையடுத்து தனுஷ் தனது மகன்களுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
நடிகர் தனுஷ் பழனி மலைக்கோயிலுக்கு வந்த தகவல் அறிந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அவரைக் காண ஆர்வத்துடன் திரண்டனர்.

