திருச்சி டிசைன் ஓவியப்பள்ளியின் 16-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, டிசைன் ஓவியப்பள்ளி மற்றும் போத்தீஸ் நிறுவனம் இணைந்து திருச்சி மாவட்ட பள்ளி மாணவ–மாணவிகளுக்கான ஓவியப்போட்டியை நடத்துகின்றன.
திருச்சி ரம்யாஸ் ஹோட்டல் சௌபாக்யா குளிர்மை அரங்கில் செப்டம்பர் 26 மற்றும் 27-ஆம் தேதிகளில் மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை போட்டிகள் நடைபெற உள்ளன.
போட்டிகள் மாணவர்களின் வயது மற்றும் வகுப்புகளின் அடிப்படையில் நான்கு பிரிவுகளாக நடத்தப்படுகின்றன. LKG மற்றும் UKG மாணவர்களுக்கு வண்ணம் தீட்டும் போட்டி நடைபெறுகிறது. 1 முதல் 3-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ‘பொம்மை உலகம் – கற்பனைக் காட்சி’, 4 முதல் 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ‘மாயாஜாலக் காடுகள்’, 7 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ‘மனிதனும் எந்திர உலகமும்’ ஆகிய தலைப்புகளில் ஓவியப்போட்டி நடைபெறுகிறது.
நான்கு பிரிவுகளுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.50,000 மதிப்பிலான பணப்பரிசுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவ–மாணவிகளுக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா செப்டம்பர் 28-ஆம் தேதி திங்கட்கிழமை மாலை நடைபெறுகிறது. விழாவில் சென்னையைச் சேர்ந்த ஓவியர் மற்றும் ‘மியூசியம் மேன் ஆஃப் இந்தியா’ என அழைக்கப்படும் ஏ.பி. ஸ்ரீதர், திரைப்படப் பாடலாசிரியர் பாவலர் அறிவுமதி, தமிழ்ச்சுடர் தாமல் கோ. சரவணன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு மாணவர்களைப் பாராட்டி பரிசுகளை வழங்குகின்றனர்.
பள்ளி மாணவர்களின் கற்பனைத் திறன், படைப்பாற்றல் மற்றும் ஓவியத் திறமையை வெளிப்படுத்தும் வகையில் நடைபெறும் இப்போட்டியில் அனைத்து பள்ளி மாணவ–மாணவிகளும் பங்கேற்கலாம். போட்டியில் பங்கேற்க அனுமதி இலவசம்.
ஓவியப்போட்டிக்கான ஏற்பாடுகளை டிசைன் ஓவியப்பள்ளி தாளாளர் மதன் மற்றும் முதல்வர் நஸ்ரத் பேகம் ஆகியோர் செய்து வருகின்றனர்.
மேலும் தொடர்புக்கு: 90039 69566

