சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ.19.24 லட்சம் முறைகேடு கண்டுபிடிப்பு
செய்திகள்

பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ.19.24 லட்சம் முறைகேடு கண்டுபிடிப்பு

🕒 23 செப்., 2026, 11:33 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ.19.24 லட்சம் முறைகேடு கண்டுபிடிப்பு

AI Highlights

  • வேளாங்கண்ணி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் ரூ.8,200 ரொக்கம் மற்றும் ரூ.19.16 லட்சம் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் சிக்கியதாக தகவல்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில், கணக்கில் வராத ரூ.8,200 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் தொடர்பான ஆவணங்களும் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர். சுமார் 40 நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சி அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். துணைக் கண்காணிப்பாளர் (DSP) இமயவர்மன் தலைமையில், ஆய்வாளர் ரமேஷ் மற்றும் 10-க்கும் மேற்பட்ட போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

பேரூராட்சி அலுவலகத்தின் பல்வேறு பிரிவுகளில் ஆவணங்கள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் குறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கணக்கில் வராததாக கூறப்படும் ரூ.8,200 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், ஜி-பே உள்ளிட்ட டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செயலிகள் மூலம் பணம் பெறப்பட்டதாகக் கூறப்படும் பதிவுகள் மற்றும் ஆவண ஆதாரங்களும் சோதனையில் கிடைத்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அந்த பதிவுகளின் அடிப்படையில் ரூ.19 லட்சத்து 16 ஆயிரத்து 280 அளவுக்கு டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாகவும், ரொக்கப் பணத்துடன் சேர்த்து மொத்தம் ரூ.19 லட்சத்து 24 ஆயிரத்து 480 அளவிலான முறைகேடு தொடர்பான தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டிட அனுமதி, குடிநீர் இணைப்பு மற்றும் பல்வேறு ஒப்பந்தப் பணிகளுக்கான ஒப்புதல்கள் உள்ளிட்ட சேவைகளுக்காக பொதுமக்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் சட்டவிரோதமாக பணம் வசூலிக்கப்படுவதாக கிடைத்த ரகசியப் புகார்களின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் மூலம் பணம் பெறப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔