சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/கூலி உயர்வு, நிவாரணம் கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் நெசவாளர்கள் அறப்போராட்டம் – 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தல்
செய்திகள்

கூலி உயர்வு, நிவாரணம் கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் நெசவாளர்கள் அறப்போராட்டம் – 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தல்

🕒 24 செப்., 2026, 11:32 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
கூலி உயர்வு, நிவாரணம் கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் நெசவாளர்கள் அறப்போராட்டம் – 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தல்
✨

AI Highlights

  • •விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கூலி உயர்வு, வேலை இழப்பு நிவாரணம் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் 2-வது நாளாக அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

2-வது நாளாக தொடரும் போராட்டம்; தமிழக அரசு நடவடிக்கை எடுக்க நெசவாளர்கள் வலியுறுத்தல்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கூலி உயர்வு, வேலை இழப்பு காலத்திற்கான நிவாரணம் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெசவாளர்கள் 2-வது நாளாக அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் 6 நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 3,000-க்கும் மேற்பட்ட பெடல் தறிகளில், குறிப்பாக பொங்கல் தொகுப்பில் அரசு வழங்கும் சேலைகள் நெசவு செய்யப்பட்டு வருவதாக நெசவாளர்கள் தெரிவித்தனர்.

2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பார்டர் கொண்ட புதிய ரக சேலைக்கு உரிய கூலி நிர்ணயம் செய்ய வேண்டும், கடந்த 4 மாதங்களாக ஏற்பட்டுள்ள வேலை இழப்புக்கு நிவாரணம் வழங்க வேண்டும், கூட்டுறவு சங்கங்களில் இருப்பில் உள்ள பழைய ரக சேலைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை நெசவாளர்கள் முன்வைத்துள்ளனர்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் முன்பு கஞ்சித் தொட்டி திறப்பு, பிச்சை எடுக்கும் போராட்டம் மற்றும் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் நெசவாளர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.

மேலும், தங்களது போராட்டம் மற்றும் கோரிக்கைகள் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் மற்றும் அரசு அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தவில்லை என்றும், தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை என்றும் நெசவாளர்கள் குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில், தமிழக அரசு நெசவாளர்களின் 17 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, 2-வது நாளாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் ஊர்வலமாகச் சென்றனர். பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு ரத வீதியில் உள்ள ஸ்டேட் வங்கி முன்பு அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, 17 அம்ச கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔