தமிழகம் முழுவதும் அரசு நிறுவனமான ஆவின் பால் விற்பனை செய்து வருகிறது கொழுப்பு நீக்கப்பட்ட பால் கூடுதல் கொழுப்பு உள்ள பால் என பல்வேறு வகையான பாக்கெட்டுகளில் பால் விற்பனை செய்யப்பட்டு வந்தது சென்னை கோவை மதுரை திருநெல்வேலி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஆவின் நிறுவனம் தனது தொழிற்சாலையை நிறுவி விவசாயிகளிடம் இருந்து பாலை பெற்று வந்து பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்து வருகிறது இதற்காக ஆவின் பாலகங்கள் நேரடியாக பல இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விநியோகஸ்தர்கள் மூலமாக பால் விற்பனை செய்யப்படுகிறது குறிப்பாக பாலில் காண பணத்தை முதல் நாள் DD ஆக எடுத்து அலுவலகத்தில் கொடுத்தால் மட்டுமே மறுநாள் காலையில் பாலை ஆவினில் இருந்து பெற முடியும் இந்த நிலையில் திருநெல்வேலி ஆவின் நிறுவனம் மூலம் செய்யப்படும் வரும் பால் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது நெல்லை ஆவின் திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களில் பால் சப்ளை செய்கிறது நாளொன்றுக்கு 40 ஆயிரம் லிட்டர் வரை பால் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது 15 ஆயிரம் லிட்டர் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது குறைந்த அளவு கொள்முதல் காரணமாக பால் விற்பனை அளவும் பாதிக்கும் கீழ் குறைந்துள்ளது இதிலிருந்து தயாரிக்கப்படும் மதிப்பு கூட்டுப் பொருட்களான நெய், பால்கோவா , மைசூர் பாகு உள்ளிட்டவை தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ளது எனினும் பால் தட்டுப்பாடு நீங்கவில்லை ஆவின் பாலுக்கு தனி மவுசு இருந்து வரும் நிலையில் பாலை வாங்க வேண்டும் எனில் சாலை ஏழு மணிக்கு முன்பாக ஆவின் பாலகங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது பச்சை நிற பாக்கெட்டுகள் போடுவது முதலில் நிறுத்தப்பட்ட நிலையில் பத்து ரூபாய் பாக்கெட்டுகள் மட்டும் கிடைத்து வந்தது தற்போது ஏழு மணிக்கு மேல் வந்தால் ஆவின் பால் எங்குமே கிடைக்காது என்ற நிலையே உள்ளது பல ஆவின் பாலகங்களில் பால் இல்லை என அட்டை தொங்கவிடும் அளவிற்கு நிலைமை மோசமாகி உள்ளது ஆவினை நம்பி தொழிலில் உள்ள சிறு விநியோகஸ்தர்கள் வீடுகளுக்கு சென்று பால் போடுபவர்கள் என பலர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது வழக்கமாக கோடை காலங்களில் பால்வரத்து சற்று குறையும் ஆனால் பாதிக்கும் கீழ் வரத்து குறைவதற்கு வேறு சில காரணங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது பாலுக்கான கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்திய போதும் தனியார் அளவிற்கு விலை இல்லை என தெரிகிறது அதோடு விவசாயி இடம் ஆவின் நிர்வாகம் கண்டிப்போடு நடந்து கொள்வதாக தெரிகிறது கிராமங்களில் சற்று காலதாமதம் ஆனால் கூட பாலை பெறுவதற்கான வாகனங்கள் நிற்பதில்லை இதனால் விவசாயிகள் தனியார் பால் உற்பத்தி நிறுவனங்களை நோக்கி செல்வது அதிகரித்து வருகிறது இதுகுறித்து பொதுமக்கள் விற்பனையாளர்கள் கூறுகையில் உழவர் சந்தை பகுதியில் பால் பூத்தில் 400 லிட்டர் பால் எங்களுக்கு விற்பனைக்கு வரும் நிலையில் தற்போது 200 லிட்டர் மட்டுமே வருகிறது இதன் காரணமாக மிக குறுகிய நேரத்தில் பால் விற்பனையாகி அடுத்த வருபவர்களுக்கு பால் வழங்க முடியவில்லை பாதிக்கு மேல் வேறு நிறுவன பால் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என்று தெரிவித்தனர் நீதிமன்றம் அருகே ஆவின் நிறுவனத்தின் நேரடி பார்லர் செயல்படுகிறது இதில் பால் விற்பனையோடுசூடு பால் பாதாம் பால் ஐஸ்கிரீம் மைசூர் பாகு போன்ற மதிப்பு கூட்டு பொருள்களும் விற்பனை செய்யப்படும் ஆனால் தற்போது பார்லர் களை இழந்து காணப்படுகிறது காலை 7:00 மணிக்கு மேல் பால் கிடைப்பதில்லை என்ற நிலையில் வால் இல்லை என்ற போர்டு வெளியே தொங்க விடப்படுகிறது ஆவின் பால் சமீப காலமாக கடும் தட்டுப்பாடு ஏற்படுகிறது இதனிடையே அதிகாலையிலேயே வந்தால் மட்டுமே பாலை பெறமுடிகிறது பல நேரங்களில் பால் இல்லை என்ற நிலையே உள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் இது குறித்து ஆவின் நிர்வாகத்தின் பொது மேலாளரை தொடர்பு கொண்ட போது அவர் தொலைபேசி எடுத்து பதில் அளிக்கவில்லை கடந்த இரண்டு தினங்களில் பலமுறை முயற்சித்தும் அவரிடம் இருந்து பதிலை பெற முடியவில்லை இருப்பினும் அலுவலகத்தில் விசாரித்த போது பால் வரத்து குறைந்துள்ளது உண்மைதான் மதிப்பு கூட்டு பொருள்களின் தயாரிப்பை நிறுத்தியுள்ளோம் எனினும் மக்களுக்கு தேவையான அளவு பாலை வழங்க முடியவில்லை மழைக்காலம் வந்ததும் பால் உற்பத்தி அதிகரிக்கும் விரைவில் பிரச்சனை சரியாகும் என நினைக்கிறோம் என்றனர் ஆவின் பொது மேலாளர் தனது கருத்தை தெரிவிக்க விரும்பினால் அதனையும் கேட்டு செய்தி வெளியிட தயாராக இருப்பதாக அலுவலக பணியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது சிறப்பான மக்கள் சேவை ஆற்றி வந்த பொதுத்துறை நிறுவனம் தொடர்ந்து தனது சேவையை குறைத்து வருவது பொதுமக்களை கவலை அடைய செய்துள்ளது
அரசியல்
ஆவின் பால் கடும் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி; கூடுதல் விலைக்கு தனியார் பால் வாங்கும் நிலை
🕒 22 செப்., 2026, 05:23 AM
⏱️ 3 நிமிடம் வாசிப்பு

