சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/அரசியல்/நடைபாதை தகராறில் பெரியப்பா மகன் வெட்டிக்கொலை; 5 பேர் கைது
அரசியல்

நடைபாதை தகராறில் பெரியப்பா மகன் வெட்டிக்கொலை; 5 பேர் கைது

🕒 22 செப்., 2026, 06:28 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
நடைபாதை தகராறில் பெரியப்பா மகன் வெட்டிக்கொலை; 5 பேர் கைது

AI Highlights

  • அரியலூர் புதுப்பாளையம் பகுதியில் நடைபாதையில் தண்ணீர் தேங்கியது தொடர்பான தகராறில் ராஜா வெட்டிக்கொலை செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நடைபாதையில் தண்ணீர் தேங்கியது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், உறவினரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ததாக 5 பேரை அரியலூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் புதுப்பாளையம் காலனி தெருவைச் சேர்ந்தவர்கள் நாகராஜன் மற்றும் கண்ணன். சகோதரர்களான இவர்களது வீடுகள் அருகருகே அமைந்துள்ளன. வீட்டின் முன்பு தண்ணீர் தேங்குவது மற்றும் நடைபாதையை பயன்படுத்துவது தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு நடைபாதையில் தண்ணீர் தேங்கியது தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், கண்ணனின் மகன் சுப்பிரமணியன் அரிவாளால் நாகராஜனின் மகன் ராஜாவை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ராஜாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சுப்பிரமணியன், கண்ணையன், கார்த்திகா, விஷ்வா மற்றும் அறிவழகன் ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, கொலை சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி ராஜாவின் உறவினர்கள் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔