சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/உண்ணிக் காய்ச்சல் எப்படி பரவுகிறது? முக்கிய அறிகுறிகள் என்ன?
செய்திகள்

உண்ணிக் காய்ச்சல் எப்படி பரவுகிறது? முக்கிய அறிகுறிகள் என்ன?

🕒 24 செப்., 2026, 04:57 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
உண்ணிக் காய்ச்சல் எப்படி பரவுகிறது? முக்கிய அறிகுறிகள் என்ன?
✨

AI Highlights

  • •உண்ணிக் காய்ச்சல் எனப்படும் ஸ்கிரப் டைபஸ் எப்படி பரவுகிறது, அதன் முக்கிய அறிகுறிகள் என்ன, எப்போது மருத்துவரை அணுக வேண்டும் என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுடன் சேர்த்து உண்ணிக் காய்ச்சல் பாதிப்பும் பதிவாகி வரும் நிலையில், இந்த நோய் எவ்வாறு பரவுகிறது, அதன் அறிகுறிகள் என்ன என்பது குறித்து மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

ஸ்கிரப் டைபஸ் என்று அழைக்கப்படும் உண்ணிக் காய்ச்சல், உண்ணி போன்ற மிகச்சிறிய பூச்சிகள் கடிப்பதன் மூலம் பரவும் பாக்டீரியா தொற்றால் ஏற்படுகிறது. நாய், பூனை உள்ளிட்ட விலங்குகளின் உடலில் காணப்படும் இத்தகைய பூச்சிகள் மனிதர்களைக் கடிக்கும்போது தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூச்சி கடித்த இடத்தில் சில நேரங்களில் கரும்புள்ளி போன்ற அடையாளம் ஏற்படலாம். இதனுடன் காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் தென்படலாம். இருப்பினும், இந்த அறிகுறிகள் பொதுவாக பல்வேறு காய்ச்சல்களிலும் காணப்படுவதால், அறிகுறிகளை மட்டும் வைத்து உண்ணிக் காய்ச்சலை உறுதி செய்ய முடியாது. மருத்துவப் பரிசோதனை அவசியமாகிறது. சிலருக்கு காய்ச்சல் மட்டும் இருக்கலாம். மற்றவர்களுக்கு தொற்று தீவிரமடைந்தால் கல்லீரல், நுரையீரல் உள்ளிட்ட உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, தொடர்ந்து காய்ச்சல் இருக்கும் நிலையில் அலட்சியம் செய்யாமல் மருத்துவரை அணுகுவது அவசியம். உண்ணிக் காய்ச்சலுக்கு சிகிச்சை உள்ளது. நோய் உறுதி செய்யப்பட்டால் உரிய மருத்துவ சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் உள்ளுறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் குணமடைய கூடுதல் காலம் தேவைப்படலாம்.

செடிகள், புதர்கள் மற்றும் தோட்டப் பகுதிகளில் செல்லும்போது பூச்சிக்கடியில் இருந்து பாதுகாத்துக் கொள்வது அவசியம். வீட்டுக்குள்ளும் இத்தகைய பூச்சிகள் இருக்க வாய்ப்புள்ளதால் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பதுடன், பூச்சிக்கடி ஏற்பட்டுள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும்.

மூன்று நாட்களுக்கும் மேலாக காய்ச்சல் நீடித்தால், சுயமாக மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல் மருத்துவரை அணுகி உரிய பரிசோதனை மற்றும் சிகிச்சை பெறுவது அவசியம் என அறிவுறுத்தப்படுகிறது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔