சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/ரஞ்சன் குமார், சாந்தி என்னை சந்தித்தது உண்மை; பணம் பறிக்கும் நோக்கில் என்னை அணுகியவர்கள் அவர்கள்தான் – அரசியல் பிரமுகர் விளக்கம்
செய்திகள்

ரஞ்சன் குமார், சாந்தி என்னை சந்தித்தது உண்மை; பணம் பறிக்கும் நோக்கில் என்னை அணுகியவர்கள் அவர்கள்தான் – அரசியல் பிரமுகர் விளக்கம்

🕒 24 செப்., 2026, 11:58 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
ரஞ்சன் குமார், சாந்தி என்னை சந்தித்தது உண்மை; பணம் பறிக்கும் நோக்கில் என்னை அணுகியவர்கள் அவர்கள்தான் – அரசியல் பிரமுகர் விளக்கம்

AI Highlights

  • 2 ஆண்டுகளுக்கு முன்பாக ரஞ்சன் குமார் என்னை இல்லத்தில் வந்து சந்தித்தார். ஒரு அரசியல் பிரமுகர் பெயர் சொல்லி என்னை பார்ப்பதற்காக வந்திருந்தார். என் வீட்டிற்கு வந்து என்னை பார்த்தார். அதன்பிறகு சாந்தி என்பவர் உங்களை பார்க்க வேண்டும் என்று கூறினார். ஒரு குடும்ப விஷயமாக பேச வேண்டும் என்று கூறினார்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு ரஞ்சன் குமார் தனது வீட்டிற்கு வந்து தன்னை சந்தித்ததாகவும், பின்னர் சாந்தி என்பவரை அழைத்து வந்து குடும்ப விவகாரம் தொடர்பாக பேச வைத்ததாகவும் அரசியல் பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

“ரஞ்சன் குமார் என்னை சந்திப்பதற்காக வீட்டிற்கு வந்தார். ஒரு அரசியல் பிரமுகரின் பெயரை கூறி என்னை பார்க்க வந்ததாக தெரிவித்தார். அதன்பிறகு சாந்தி என்பவர் என்னை சந்திக்க வேண்டும் என்றும், குடும்ப விஷயம் தொடர்பாக பேச வேண்டும் என்றும் கூறினார்.

இதையடுத்து தாஜ் ஹோட்டலில் வைத்து பேசுவதற்காக அழைத்துச் சென்றனர். அப்போது சாந்தி வீரமணி என்பவரை தனக்கு தெரியும் என்றும், அவரிடம் இருந்து ரூ.20 கோடி வாங்கித் தர வேண்டும் என்றும் என்னிடம் கூறினார். வீரமணி தன்னை கெடுத்து தனது வாழ்க்கையை சீரழித்துவிட்டதாகவும் அந்தப் பெண் தெரிவித்தார்.

இது அவர்களது தனிப்பட்ட விவகாரம் என்பதால், அவர்களே பேசி முடித்துக்கொள்ள வேண்டும் என்று நான் கூறினேன். ரஞ்சன் குமாரும் அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக என்னிடம் பேசினார். அதன்பிறகு நான் அந்தப் பிரச்சினையில் இருந்து விலகிவிட்டேன். அதன்பின்னர் இது தொடர்பாக யாரும் என்னிடம் பேசவில்லை.

நான் யாரையும் மிரட்டியதாக கூறுபவர்கள் காவல்துறையில் புகார் அளித்திருக்க வேண்டும். ஆனால், ரஞ்சன் குமார் ஏன் அந்தப் பெண் சாந்தியை அழைத்துக்கொண்டு என்னை சந்திக்க வந்தார்? ரஞ்சனும் சாந்தியும் வீரமணிக்காக இடைத்தரகர்களாக செயல்படுகிறார்களா என்ற கேள்வி எழுகிறது.

இந்த விவகாரத்தில் ஜான் பாண்டியன் என்ன செய்தார் என்பதும், அவருக்கும் எனக்கும் என்ன தொடர்பு என்பதும் எனக்கு தெரியாது. அரசியல் காரணங்களுக்காக புதிய தமிழகம் கட்சியை சேர்ந்தவர்கள் இந்த விவகாரத்தை பெரிதாக்கி வருவதாக நான் கருதுகிறேன்.

நான் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருக்கும் நிலையில், இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என் மீது தவறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆயிரக்கணக்கான நண்பர்கள் எனக்கு இருக்கிறார்கள். அவர்களது தனிப்பட்ட விஷயங்களை அவர்கள் என்னிடம் பகிர்ந்து கொள்வார்கள். அதற்காக அவர்களது பிரச்சினைகளில் நான் தலையிட முடியாது. பணம் பறிக்கும் நோக்கத்தில்தான் சாந்தியும் ரஞ்சன் குமாரும் என்னை அணுகியதாக நான் கூறுகிறேன்.

வீரமணியின் வீடியோவை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன்? அவர் தவறு செய்திருந்தால் அதற்கான தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டும். அந்த வீடியோவை சாந்திதான் எடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் இடைத்தரகராக செயல்பட்டாரா என்ற கேள்வியும் எழுகிறது. இந்த விவகாரத்தில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை.

புதிய தமிழகம் கட்சியினர்தான் என் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள். நேரடியாக என்னை சந்தித்து இதுபற்றி பேச அவர்கள் தயாராக இருக்க வேண்டும். தேவையில்லாத சர்ச்சைகளை கிளப்பி மக்களை குழப்ப வேண்டாம்.

முதலமைச்சர் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். ரஞ்சன் குமார் அரசியல் செய்கிறார். அவரை பின்னால் இருந்து யாரோ இயக்குவதாக நான் கருதுகிறேன். தி.மு.க.வுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நோக்கில் இதுபோன்ற செயல்களில் அவர் ஈடுபடுவதாகவும், இது அரசியல் நாடகம் என்றும் நான் கூறுகிறேன்.

என் மீது அவதூறு பரப்பியதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக தமிழகம் முழுவதும் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளிக்குமாறு கூறியுள்ளேன். எனது கட்சி நிர்வாகிகளிடமும் இதுபற்றி யாருக்கும் பதில் அளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளேன்.

என் மீது எந்தத் தவறும் இல்லை. ரஞ்சன் குமாரை யாரோ பணம் கொடுத்து பேச வைத்திருக்கலாம். என்னிடம் பேசுவதற்காக அவரை ஒரு அரசியல் தலைவர் ஏற்பாடு செய்திருக்கலாம். அந்த நபர் யார் என்பதை ரஞ்சன் குமாரே வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

எனக்குத் தெரியாத விஷயங்கள் குறித்து நான் எப்படி கருத்து தெரிவிக்க முடியும்? தனிப்பட்ட ஆதாயத்திற்காகவே இந்த விவகாரம் எழுப்பப்படுவதாக கருதுகிறேன்.

ஜே. வீரமணி தொடர்பாக என்னிடம் ஆதாரங்கள் இருந்திருந்தால், அவற்றை நான் உடனடியாக வெளியிட்டு இருப்பேன். யாராவது தவறு செய்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔