சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/கல்குவாரி அனுமதியை ரத்து செய்ய கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு – அடுத்தகட்ட போராட்டம் குறித்து எச்சரிக்கை
செய்திகள்

கல்குவாரி அனுமதியை ரத்து செய்ய கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு – அடுத்தகட்ட போராட்டம் குறித்து எச்சரிக்கை

🕒 25 செப்., 2026, 04:40 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
கல்குவாரி அனுமதியை ரத்து செய்ய கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு – அடுத்தகட்ட போராட்டம் குறித்து எச்சரிக்கை
✨

AI Highlights

  • •நாங்குநேரி அருகே பாப்பான்குளத்தில் தனியார் கல்குவாரி அனுமதியை ரத்து செய்யக் கோரி பொதுமக்கள் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பாப்பான்குளம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தனியார் கல்குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக் கோரி அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று ஏராளமான பொதுமக்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு அளித்தனர்.

வடக்கு பாப்பான்குளம் பகுதியில் தனியார் கல்குவாரி அமைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், இதற்கு அப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கல்குவாரி செயல்பாட்டால் அருகில் உள்ள கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்திற்கு பாதிப்பு ஏற்படுவதுடன், வெடிவைத்து பாறைகளை உடைப்பதால் வீடுகளுக்கும் சேதம் ஏற்படும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, கல்குவாரி அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த 18-ம் தேதி முதல் கிராம மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும், பந்தல் அமைத்து இரவு பகலாக தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதனிடையே, நேற்று 23-ம் தேதி அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பாப்பான்குளம் பகுதி மக்கள் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து, கல்குவாரி அனுமதியை ரத்து செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொதுமக்கள், பாப்பான்குளம் பகுதியில் சட்டவிரோதமாக கல் குவாரி செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோரிடம் பலமுறை எழுத்துப்பூர்வமாகவும், புகைப்பட ஆதாரங்களுடனும் மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர்.

ஒவ்வொரு முறையும் அதிகாரிகள் தரப்பில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுவதாகவும், ஆனால் குவாரி பணிகளை முழுமையாக தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் கூறினர்.

மேலும், போராட்டம் நடைபெறும் நேரங்களில் மட்டும் குவாரி பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும், அதிகாரிகள் அங்கிருந்து சென்ற பிறகு மீண்டும் வெடி வைக்கும் நடவடிக்கைகள் நடைபெறுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

குறிப்பாக இரவு நேரங்களில் வெடிகள் பயன்படுத்தப்படுவதால் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் அச்சமடைந்து ஓடுவதாகவும், பொதுமக்கள் அச்சத்துடன் இரவு நேரங்களை கழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தைச் சுற்றியுள்ள பகுதியில் குவாரி செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகள் இருப்பதாகவும், இதுதொடர்பான நீதிமன்ற உத்தரவின் நகலை அதிகாரிகளிடம் வழங்கியுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். பறவைகள் சரணாலயத்தையும், கிராம மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் வகையில் குவாரி அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

கல்குவாரி தொடர்பான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படாவிட்டால் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என தெரிவித்த பொதுமக்கள், அடுத்தகட்டமாக உண்ணாவிரதம், சாலை மறியல், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி உள்ளிட்ட பல்வேறு அறவழிப் போராட்டங்களை நடத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔