சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/தாயில்பட்டியில் தகர செட்டில் பட்டாசுகள் வெடித்த விபத்து – சிகிச்சை பெற்று வந்த வீட்டின் உரிமையாளர் உயிரிழப்பு
செய்திகள்

தாயில்பட்டியில் தகர செட்டில் பட்டாசுகள் வெடித்த விபத்து – சிகிச்சை பெற்று வந்த வீட்டின் உரிமையாளர் உயிரிழப்பு

🕒 25 செப்., 2026, 06:01 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
தாயில்பட்டியில் தகர செட்டில் பட்டாசுகள் வெடித்த விபத்து – சிகிச்சை பெற்று வந்த வீட்டின் உரிமையாளர் உயிரிழப்பு
✨

AI Highlights

  • •சிவகாசி அருகே தாயில்பட்டியில் தகர செட்டில் பட்டாசுக் கழிவுகள் வெடித்த விபத்தில் பலத்த தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மைக்கேல்ராஜ் உயிரிழந்தார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தாயில்பட்டியில் குடியிருப்பு அருகே அமைக்கப்பட்டிருந்த தகர செட்டில் பட்டாசுகள் வெடித்த விபத்தில் பலத்த தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த வீட்டின் உரிமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தாயில்பட்டி எஸ்.பி.எம். தெருவைச் சேர்ந்த மைக்கேல்ராஜ் என்பவரது வீட்டின் பின்புறம் தகர செட் அமைக்கப்பட்டு, அதில் பட்டாசுகள் மற்றும் பட்டாசு தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

சமீப காலமாக சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு மற்றும் பதுக்கல் தொடர்பாக அதிகாரிகள் ஆய்வுகளை தீவிரப்படுத்திய நிலையில், கடந்த 21-ம் தேதி தகர செட்டில் இருந்த பட்டாசுகள் மற்றும் ரசாயனப் பொருட்களை அப்புறப்படுத்திவிட்டு, தகர செட்டை அகற்றும் பணியில் மைக்கேல்ராஜ் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த பட்டாசுக் கழிவுகள் மற்றும் ரசாயன மூலப்பொருட்களில் உராய்வு ஏற்பட்டு தீப்பற்றி வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மைக்கேல்ராஜ் பலத்த தீக்காயமடைந்தார். சம்பவம் தொடர்பாக வெம்பக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மைக்கேல்ராஜ், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔