சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/பொதுப்பாதை ஆக்கிரமிப்பு? – நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை
செய்திகள்

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு? – நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை

🕒 25 செப்., 2026, 04:42 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பொதுப்பாதை ஆக்கிரமிப்பு? – நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை
✨

AI Highlights

  • •விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே தச்சனேந்தல் கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் பாதையில் மண் கொட்டி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாதையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே தச்சனேந்தல் கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் பாதை மண்ணை கொட்டி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் அவசர காலங்களில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தச்சனேந்தல் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இருந்து வேப்பங்குளம், களத்தூர், நாங்கூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பொதுமக்கள் சென்று வருவதற்கு குறிப்பிட்ட பொதுப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அந்தப் பொதுப்பாதையில் அதே கிராமத்தைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் மண்ணை கொட்டி பாதையை ஆக்கிரமித்துள்ளதாக கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, தச்சனேந்தல் பகுதியைச் சேர்ந்த சுசிலா என்பவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்று ஆட்டோவில் வீடு திரும்பியுள்ளார். ஆக்கிரமிப்பு காரணமாக பாதை குறுகியிருந்ததால், அவரது ஆட்டோ வீட்டின் அருகே செல்ல முடியாமல் சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அவசர காலங்களில் பொதுமக்கள் பயன்படுத்தும் இந்தப் பாதை இதுபோன்று தடைபட்டிருப்பது கவலை அளிப்பதாக தெரிவித்த சுசிலா, தனக்கு ஏற்பட்ட சிரமம் போன்று வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது என கூறினார்.

மேலும், 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வரும் இந்தப் பாதையில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுசிலா கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔