விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பொது நிதியை முறைகேடு செய்த வழக்கில், வட்டார வளர்ச்சி அலுவலர் (பி.டி.ஓ) உள்பட ஐந்து பேரை மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் (ஷரண்யா அறி) சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் எவ்வித வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ளாமல், பணிகள் நடைபெற்றதாகக் கணக்கு காட்டி பொது நிதியை கையாடல் செய்ததாகவும், நிர்வாகத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்த புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, வட்டார வளர்ச்சி அலுவலர் காஜாமைதீன் பந்தே நவாஸ், இதற்கு உடந்தையாக செயல்பட்ட உதவிப் பொறியாளர் அர்ஜுனன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் துரைக்கண்ணன், கணக்காளர் சரவணகுமார் மற்றும் உதவியாளர் பரகத் பாபிதா பானு ஆகிய ஐந்து பேரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

