சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/பிரபல பிரியாணி கடையின் உரிமம் தற்காலிகமாக ரத்து – 51 கிலோ பழைய உணவுகள் அழிப்பு
செய்திகள்

பிரபல பிரியாணி கடையின் உரிமம் தற்காலிகமாக ரத்து – 51 கிலோ பழைய உணவுகள் அழிப்பு

🕒 24 செப்., 2026, 04:34 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பிரபல பிரியாணி கடையின் உரிமம் தற்காலிகமாக ரத்து – 51 கிலோ பழைய உணவுகள் அழிப்பு
✨

AI Highlights

  • •சிவகாசி–திருத்தங்கல் சாலையில் உள்ள பிரபல பிரியாணி உணவகத்தில் உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு நடத்தியதில் 51 கிலோ பழைய உணவுகள், மசாலாப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பழைய சிக்கன் உள்ளிட்ட உணவுப் பொருட்களை இருப்பு வைத்திருந்ததாகக் கண்டறியப்பட்ட பிரபல பிரியாணி உணவகத்தின் உணவுப் பாதுகாப்பு உரிமத்தை தற்காலிகமாக இடைநீக்கம் செய்து உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

விருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையிலான அதிகாரிகள் குழு, சிவகாசி–திருத்தங்கல் சாலையில் செயல்பட்டு வரும் பிரபல பிரியாணி உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டது.

அப்போது முந்தைய நாள் சமைத்து மீதமானதாகக் கூறப்படும் சிக்கன், சாதம், நூடுல்ஸ், கிரேவி வகைகள், பரோட்டா மாவு உள்ளிட்ட 51 கிலோ பழைய உணவுப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

மேலும், தரமற்றதாகக் கூறப்படும் 13 கிலோ சிக்கன் மசாலா மற்றும் 64 கிலோ பிரியாணி மசாலா ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

முக்கிய ஆவணங்கள் இல்லை

உணவகத்தில் ஆய்வு செய்தபோது, தண்ணீர் பகுப்பாய்வு அறிக்கை, எண்ணெய் பகுப்பாய்வு அறிக்கை, குறிப்பிட்ட கால இடைவெளியில் மேற்கொள்ளப்பட்ட உணவுப் பகுப்பாய்வு அறிக்கை உள்ளிட்ட ஆவணங்கள் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், பணியாளர்களுக்கான மருத்துவத் தகுதிச் சான்றிதழ், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட பூச்சித் தடுப்பு சான்று மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பான பணியாளர் பயிற்சி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களும் இல்லை என கூறப்படுகிறது.

கழிவுநீர் வடிகால் அருகே அசைவ உணவுகள்

ஆய்வின்போது அதிக ஆபத்துள்ள அசைவ உணவுப் பொருட்கள் கழிவுநீர் வடிகால் மீது வைக்கப்பட்டிருந்ததாகவும், அசுத்தமான சூழலில் உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டதாகவும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து பொதுமக்களின் சுகாதார நலனை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட பிரியாணி உணவகத்தின் உணவுப் பாதுகாப்பு உரிமத்தை தற்காலிகமாக இடைநீக்கம் செய்து நியமன அலுவலர் மாரியப்பன் உத்தரவிட்டார்.

பறிமுதல் செய்யப்பட்ட மசாலாப் பொருட்களில் இருந்து உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சுகாதாரமற்ற சூழலில் உணவுப் பொருட்களைத் தயாரித்தது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் உணவு பாதுகாப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔