சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/அரசியல்/நெல்லையில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவு திட்டம் விரிவாக்கம்
அரசியல்

நெல்லையில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவு திட்டம் விரிவாக்கம்

🕒 22 செப்., 2026, 05:22 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
நெல்லையில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவு திட்டம் விரிவாக்கம்

AI Highlights

  • நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை எம்.எல்.ஏ. ஆர்.எஸ். முருகன் தொடங்கி வைத்தார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி பள்ளியில் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காக பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த திட்டத்தை நடுநிலை வகுப்புகளான 6 முதல் 8-ம் வகுப்பு வரை விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன் தொடக்க நிகழ்ச்சியை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்ததை தொடர்ந்து, நெல்லை டவுன் பகுதியில் உள்ள கல்லணை மாநகராட்சி பள்ளியில் விரிவாக்கப்பட்ட காலை உணவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நெல்லை தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ். முருகன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ரானா ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவியருக்கு காலை உணவு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து, மாணவ, மாணவியருடன் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டனர். பள்ளியில் சுடச்சுட வழங்கப்பட்ட காலை உணவை மாணவர்கள் ஆர்வத்துடன் சாப்பிட்டனர்.

இந்த விரிவாக்கப்பட்ட காலை உணவு திட்டத்தின் மூலம் நெல்லை மாவட்டத்தில் உள்ள 352 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் 32,734 குழந்தைகள் பயன்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔