சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/அரசியல்/6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு விரிவாக்கப்பட்ட காலை உணவு திட்டம் தொடக்கம்
அரசியல்

6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு விரிவாக்கப்பட்ட காலை உணவு திட்டம் தொடக்கம்

🕒 22 செப்., 2026, 05:15 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு விரிவாக்கப்பட்ட காலை உணவு திட்டம் தொடக்கம்

AI Highlights

  • விருதுநகர் டி.வி.எஸ். நடுநிலைப் பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான விரிவாக்கப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்தை எஸ்.பி. செல்வம் தொடங்கி வைத்து மாணவர்களுடன் உணவு அருந்தினார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் விருதுநகரில் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக காலை உணவு திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், மாணவர்களின் ஊட்டச்சத்து மற்றும் கல்வி நலனை கருத்தில் கொண்டு இத்திட்டம் தற்போது 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த விரிவாக்கப்பட்ட திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக, விருதுநகர் டி.வி.எஸ். நடுநிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.

இதில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. செல்வம் கலந்து கொண்டு 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை உட்கொண்ட எஸ்.பி. செல்வம், அவர்களுடன் கலந்துரையாடினார். இதனால் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டது.

விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள இந்த காலை உணவு திட்டத்தின் மூலம் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களும் பள்ளி நாட்களில் காலை உணவை பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔