சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/பணிச்சுமை, மன உளைச்சல் குறித்து ஆடியோ வெளியிட்ட தலைமை காவலர் பணியிடை நீக்கம் – காவல் ஆய்வாளர் விளக்கம்
செய்திகள்

பணிச்சுமை, மன உளைச்சல் குறித்து ஆடியோ வெளியிட்ட தலைமை காவலர் பணியிடை நீக்கம் – காவல் ஆய்வாளர் விளக்கம்

🕒 26 செப்., 2026, 07:24 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
பணிச்சுமை, மன உளைச்சல் குறித்து ஆடியோ வெளியிட்ட தலைமை காவலர் பணியிடை நீக்கம் – காவல் ஆய்வாளர் விளக்கம்
✨

AI Highlights

  • •திருநெல்வேலையில் பணிச்சுமை மற்றும் மன உளைச்சல் குறித்து ஆடியோ வெளியிட்ட தலைமை காவலர் ஜோயல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தகவல். குற்றச்சாட்டுகள் குறித்து காவல் ஆய்வாளர் அழகர் விளக்கம் அளித்துள்ளார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வரும் ஜோயல், பணிச்சுமை மற்றும் மன உளைச்சல் தொடர்பாக ஆடியோ வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ஆடியோவில், காவல் ஆய்வாளர் அழகர் தன்னை கடுமையான பணிச்சுமை மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாக ஜோயல் குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது. மேலும், பணிச்சுமை மற்றும் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும், தனது மரணத்திற்கு காவல் ஆய்வாளர் அழகர் மற்றும் பாளையங்கோட்டை நுண்ணறிவுப் பிரிவு காவலர் பாலமுருகன் ஆகியோர் காரணம் என்றும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், விவகாரம் மாநகர காவல் ஆணையாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் கவனத்திற்கு சென்றதாக தெரிகிறது. இதையடுத்து, உயர் அதிகாரிகளிடம் முறையாக புகார் அளிக்காமல் தற்கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் ஆடியோ வெளியிட்டதாகக் கூறி, தலைமை காவலர் ஜோயலை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசு வாகனம் தொடர்பாக ஏற்பட்டதாக கூறப்படும் பிரச்சினை

ஜோயல், காவல் ஆய்வாளர் அழகரின் அரசு வாகன ஓட்டுநராக சில மாதங்களுக்கு முன்பு பணியாற்றியதாக கூறப்படுகிறது. அந்த காலகட்டத்தில் மதுரையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு ஆய்வாளர் அழகர் அரசு வாகனத்தில் சென்றபோது, ஜோயலும் உடன் சென்றதாக தெரிகிறது.

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பியபோது, ஆய்வாளரின் உத்தரவின்படி வாகனம் வேகமாக இயக்கப்பட்டதாகவும், இதனால் வாகனத்தின் மேற்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த விளக்குகள் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்பின்னர் ஜோயல் ஓட்டுநர் பணியில் இருந்து ரோந்து வாகனப் பணிக்கு மாற்றப்பட்டதாகவும், தொடர்ந்து 45 நாட்கள் பணியில் இருந்ததால் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும், விடுமுறை கேட்டும் கிடைக்கவில்லை எனவும் அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல் ஆய்வாளர் அழகர் விளக்கம்

இதனிடையே, தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக காவல் ஆய்வாளர் அழகர் விளக்கம் அளித்துள்ளார்.

மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெறும் நேரங்களில் அரசு வாகனத்தை எடுத்துச் செல்வது வழக்கமான நடைமுறை என்றும், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜரான பின்னரே திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதில் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும், ஜோயலுக்கு தொடர்ந்து 45 நாட்கள் விடுமுறை வழங்கப்படவில்லை என கூறப்படுவது தவறான தகவல் என்றும் ஆய்வாளர் அழகர் தெரிவித்துள்ளார். காவலர்கள் பற்றாக்குறை இருப்பது உண்மை என்றாலும், சீரான இடைவெளியில் காவலர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தலைமை காவலர் ஜோயல் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பணியிடை நீக்க நடவடிக்கை குறித்து காவல்துறை வட்டாரங்களில் விவாதம் எழுந்துள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔