தமிழக அலுவலர் ஆசிரியர் வெற்றிச்சங்கம் சார்பில், கோவை மண்டலத்துக்கு உட்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி பகுதிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான கொடியேற்று விழா மற்றும் கல்வி விழா சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கோயம்புத்தூர் டாஸ்மாக் சிந்தாமணி குடோன் வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி காலை 8 மணிக்கு தொடங்கியது. நிகழ்ச்சிக்கு டாஸ்மாக் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. மணிமாறன் தலைமை வகித்தார்.
முன்னிலையாக தென்காசியைச் சேர்ந்த எம்.கே. லட்சுமணன், கோவையைச் சேர்ந்த எம். சௌந்திரபாண்டியன், சலீம், முருகேசன், கிருஷ்ணன், வடிவேல், செந்தில்குமார், ஆதிராம் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இவர்கள் கோவை, திருப்பூர், ஈரோடு, பொள்ளாச்சி, ஊட்டி மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளாக பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் தோழர் பி.சுந்தரவளவன் கல்வெட்டை திறந்து வைத்தார். தொடர்ந்து, தமிழக அலுவலர் ஆசிரியர் வெற்றிச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் தலைமையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தமிழக வெற்றிக்கழகத்தின் எழுத்தாளரும் மாநில முதன்மை செய்தித் தொடர்பாளருமான சி.மகேந்திரன் கொடியேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
‘சிங்கப் பெண்கள் சிறப்பித்தல்’ விழா
இதனைத் தொடர்ந்து, அலுவலர் ஆசிரியர் தொழிலாளர் சங்கம் சார்பில் “சிங்கப் பெண்கள் சிறப்பித்தல்” என்ற தலைப்பில் சிறப்பு விழா நடைபெற்றது. கோயம்புத்தூர் ஹோட்டல் பிளாசா இன் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஆசிரியர்–தொழிலாளர் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் தொழிலாளர்களின் பங்களிப்பை பாராட்டும் வகையிலும், அவர்களின் நலன் மற்றும் சமூக முன்னேற்றம் தொடர்பான கருத்துகளை வலியுறுத்தும் வகையிலும் உரைகள் இடம்பெற்றன.

