சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/புதிய பேருந்து நிலையத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு – 3 கடைகளுக்கு சீல்
செய்திகள்

புதிய பேருந்து நிலையத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு – 3 கடைகளுக்கு சீல்

🕒 26 செப்., 2026, 04:55 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
புதிய பேருந்து நிலையத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு – 3 கடைகளுக்கு சீல்
✨

AI Highlights

  • •நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு: 3 கடைகளுக்கு சீல்; அதிகாரிகளைக் கண்டு 25-க்கும் மேற்பட்ட கடைகள் மூடல்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருநெல்வேலி சந்திப்பு புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

நெல்லை புதிய பேருந்து நிலையம் தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்லும் முக்கிய பகுதியாக உள்ளது. இங்கு ஹோட்டல்கள், தேநீர் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் வெள்ளிக்கிழமை பேருந்து நிலைய வளாகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சில கடைகளில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும் வகையில் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

குறிப்பாக, நடைமேடைகளில் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் சமையல் உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்ததால் பொதுமக்களுக்கு இடையூறும், அச்சமும் ஏற்படும் சூழல் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

3 கடைகளுக்கு சீல்

ஆட்சியரின் உத்தரவையடுத்து மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ராணா அறிவுறுத்தலின்பேரில், மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையர் சந்திரமோகன் தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள் புதிய பேருந்து நிலையத்திற்கு சென்றனர்.

அங்கு ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், விதிமீறலில் ஈடுபட்ட 3 கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.

மேலும், கடை உரிமையாளர்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை

கடைகளின் முன்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என அனைத்து கடை உரிமையாளர்களுக்கும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

விதிகளை மீறி தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் காவல்துறை மூலம் அபராதம் விதிப்பதுடன், கடைகளுக்கான குத்தகை உரிமத்தையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் மேற்கொண்ட திடீர் ஆய்வும், தொடர்ந்து 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔