சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்
செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்

🕒 25 செப்., 2026, 12:15 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்
✨

AI Highlights

  • •சிவகாசி அருகே நாரணாபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் மாணவ-மாணவியருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. டெங்கு மற்றும் காய்ச்சல் தடுப்பு குறித்து சித்த மருத்துவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நாரணாபுரம் அரசு தொடக்கப்பள்ளியில், டெங்கு மற்றும் காய்ச்சல் பாதிப்புகளைத் தடுக்கும் வகையில் பள்ளி மாணவ-மாணவியருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகள் தொடர்பாக தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பள்ளிகளிலும் சுகாதார விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக நாரணாபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாரணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவப் பிரிவைச் சேர்ந்த மருத்துவர்கள் கலந்து கொண்டு மாணவ-மாணவியருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர்.

மேலும், காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சுகாதாரத்தைப் பேணுவதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

தொடர்ந்து நாரணாபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளிலும் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔