விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வி.வி.ஆர். காலனியைச் சேர்ந்தவர் மணிமுருகன். இவர் அப்பகுதியில் திமுக நகர்மன்ற உறுப்பினராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் அருப்புக்கோட்டையில் உள்ள அரசு உதவிபெறும் எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2022 முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் செயலாளராகப் பணியாற்றி வந்தார். மணிமுருகன் செயலாளராக இருந்த காலத்தில் பள்ளி நிதியில் சுமார் 1.51 கோடி ரூபாய் வரை முறைகேடு செய்து மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக எஸ்.பி.கே. பள்ளியின் தற்போதைய நிர்வாகிகள் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தனர். அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர், திமுக நகர்மன்ற உறுப்பினர் மணிமுருகனைக் கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தவெக-வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
செய்திகள்
ரூ.1.51 கோடி நிதி மோசடி: திமுக நகர்மன்ற உறுப்பினர் கைது!
🕒 22 செப்., 2026, 09:25 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

