சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/மயானத்திற்கு பாதை வசதி கோரி பிரேதம் போல் வேடமிட்டு நூதன போராட்டம் – விருதுநகர் அருகே பரபரப்பு
செய்திகள்

மயானத்திற்கு பாதை வசதி கோரி பிரேதம் போல் வேடமிட்டு நூதன போராட்டம் – விருதுநகர் அருகே பரபரப்பு

🕒 22 செப்., 2026, 09:28 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
மயானத்திற்கு பாதை வசதி கோரி பிரேதம் போல் வேடமிட்டு நூதன போராட்டம் – விருதுநகர் அருகே பரபரப்பு

AI Highlights

  • விருதுநகர் அருகே பாவாலி கிராமத்தில் மயானத்திற்கு முறையான பாதை வசதி கோரி விசிக மற்றும் பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருவர் பிரேதம் போல் வேடமிட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் அருகே பாவாலி கிராமத்தில் பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட மயானத்திற்கு முறையான பாதை வசதி ஏற்படுத்தித் தரக்கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றது.போராட்டத்தில் ஒருவர் பிரேதம் போல் வேடமணிந்து படுத்துக்கொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாவாலி ஊராட்சியில் பட்டியலின சமூக மக்களுக்காக மயானம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த மயானத்திற்குச் செல்ல முறையான பாதை வசதி இல்லாததால், கிராமத்தில் யாரேனும் உயிரிழக்கும் போது உடலை விவசாய நிலங்களில் உள்ள பயிர்களுக்கு இடையே சிரமப்பட்டு தூக்கிச் செல்ல வேண்டிய நிலை பல ஆண்டுகளாக நீடித்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மயானத்திற்கு பாதை அமைத்துத் தரக்கோரி மாவட்ட நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.

இதனை கண்டித்து, விருதுநகர் ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வளாகத்தில் விசிக ஒன்றியப் பொருளாளர் ராஜ்குமார் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது ஒருவர் இறந்தவர் போல் வேடமணிந்து, நெற்றியில் ஒரு ரூபாய் நாணயம் ஒட்டி, மாலை அணிவித்து, கை மற்றும் கால்களில் நாடி கட்டு கட்டியபடி தரையில் படுத்துக்கொண்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

மயானத்திற்கு உடனடியாக முறையான பாதை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும், இல்லையெனில் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தப் போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த நூதன போராட்டத்தால் ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டத்தில் மண்டல துணைச் செயலாளர் சக்திவேல், மாவட்ட துணைச் செயலாளர் பரமசிவம், தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் செல்வம், இளஞ்சிறுத்தை ஒன்றியச் செயலாளர் முனிச்சாமி, செய்தித் தொடர்பாளர் ராஜசேகர், நிர்வாகி தினேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் கோரிக்கைகள் குறித்து தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் செல்வம் பேட்டி அளித்தார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔